கோவை மாநகர் மாவட்ட MJTS நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் தேநீர் விருந்து

கோவைக்கு ஒரு நாள் பயணமாக வருகை மேற்கொண்டிருந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு மாநகர மஜக சார்பில் கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் என சுமார் 100 வாகனங்களில் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் ( MJTS) சார்பில் 40 ஆட்டோக்களில் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

அன்று மாலை MJTS மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், தற்போது MJTS பதிவு முறைப்படி புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் மதுரையில் MJTS-ன் மாநில செயற்குழு கூட இருப்பதாகவும், அதில் எல்லோரும் சந்திப்போம் என்றார்.

கோவையில் இன்று உற்சாக வரவேற்பளித்தமைக்கு நன்றி கூறியவர், அதன் நிர்வாகிகளுக்கு மாலையில் தேனீர் விருந்தளித்து சிறப்பித்தார்.

இதில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்யது முகம்மது பாருக் , MJTS பொறுப்பாளர் கோவை ஜாபர், MJTS மாநில பொருளாளர் கனி ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும் MJTS மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் அன்சர் அலி, துணைச்செயலாளர்கள் ஹூசைன், அமான், மற்றும் வானவில் மீட்டர் ஆட்டோ தலைவர் உசேன், துணைத் தலைவர் ஜலால் ரஹ்மான், செயலாளர் ரஹ்மான், பொருளாளர் பீர் முஹம்மது, துணைச் செயலாளர்கள் முஸ்தபா, காஜா, ரகுமான், உறுப்பினர்கள் ரியாஸ், ரஃபி, சம்சுதீன், அப்துல் ரகுமான், சஜ்ர் ரஹ்மான், இக்பால், அன்வர், அக்கிம், கிதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.09.2023