ஹார்வேர்ட் பல்கலை கழகத்தின் தமிழ் இருக்கைக்கு மீதி தொகையை தமிழக அரசே செலுத்த வேண்டும்!

image

(பகுதி – 3)

கடந்த 11.01.2018 அன்று சட்ட சபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது…

உலக புகழ்பெற்ற ஹார்வேர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைய, தமிழக அரசு பத்து கோடி வழங்கியதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசை தொடர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் இதற்கு நிதியை வாரி வழங்கியுள்ளனர்.

அப்படி இருந்தும் மூன்று முதல் ஐந்து கோடி வரை பற்றாக்குறை எற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தொகையையும் தமிழக அரசே செலுத்தினால் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இந்த அரசை பாராட்டுவார்கள்.

அதுபோல் கீழடி அகழாய்வு என்பது திராவிட கலாச்சாரத்தையும்,தமிழக பண்பாட்டையும் பின்னனியாக கொண்டது. அப்பணி தொடரும் என அமைச்சர் மா.பாண்டியராஜன் கூறியது பாராட்டதக்கது.

இவ்வாறு பேசினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*