டிச.22, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாத்துல் உலமா சார்பில், நேற்று மயிலாடுதுறையில் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைப்பெற்றது. மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார். மேலும், பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதில் மஜக மாவட்ட செயலாளர் N.M. மாலிக் தலைமையில், பொருளாளர் சங்கை தாஜ்தீன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்வர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெகபர் அலி, ஹாஜா சலீம், அணி நிர்வாகிகள் ஜாஹிர் உசேன், ஜெப்ருதீன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைவடக்குமாவட்டம்.
You are here
Home > Posts tagged "SSஹாரூன்ரசீதுகண்டனஉரை"