பிப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசு பாரபட்சத்துடன் கொண்டு வந்திருக்கும் CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோவையில் கொடிசியா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும் வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது. வாழ்வுரிமை மாநாட்டிற்காக பொதுமக்களை திரட்டும் பணியை தமிழகம் முழுவதும் உள்ள மஜக தொண்டர்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, ஆகியோர் கோவையில் வாழ்வுரிமை மாநாடு நடைபெறும் மைதானத்தை பார்வையிட்டனர். அவர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், அவைத்தலைவர் நாசர்உமரி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஈரோடு செய்யது அஹமது பாருக், மதுக்கூர் ராவுத்தர்ஷா, கோவை சுல்தான் அமீர், தைமிய்யா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன், ஆகியோர் உடனிருந்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 23.02.2020
You are here
Home > Posts tagged "மஜக கோவை மாநாட்டு பணிகள்"