மார்ச் 07, இன்று காலமான திமுக பொதுச் செயலாளர் பேரா. க.அன்பழகன் அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அவைத் தலைவர் நாசர் உமரீ நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பிறகு திமுக தலைவர் தளபதி. திரு.ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்கள் தொகுதி நிகழ்ச்சி காரணமாக வர இயலவில்லை என்று கூறி, மஜக வின் சார்பில் ஆறுதலை தெரிவித்தார். அவருடன் மாநில துணை செயலாளர் புதுமடம். அனிஸ், இளைஞர் அணி மாநில செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடன் சென்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #சென்னை.
You are here
Home > Posts tagged "பேராஅன்பழகன்உடலுக்குமஜகஅவைத்தலைவர்நாசர்உமரிநேரில்மரியாதை!"