சென்னை.ஜனவரி.06 இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், கேரளாவைப் போல, குடியுரிமை திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று முக்கிய கட்சிகள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தன. இது குறித்து தான் கொண்டு வந்த அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை இன்று அவையில் எடுத்து கொள்ள வேண்டும் என சபாநாயகரிடம் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வாதிட்டார். சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அதை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அவருக்கு ஆதரவாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அவர்களும் வெளிநடப்பு செய்தார். திமுக, காங்கிரஸ், IUML உறுப்பினர்களும் இதே கோரிக்கைக்காக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 07-01-2020
You are here
Home > Posts tagged "சட்டப்பேரவையில் முதமிமுன்அன்சாரி"