காஞ்சிபுரம்.பிப்.22 ECR , OMR , சோழிங்கநல்லூர் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் தேச பாதுகாப்பு பொதுக்கூட்டம் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் கடந்த 20.02.2020 அன்று வெட்டுவாங்கேணி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி E.அல்அமான் மிஸ்பாயி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கறுப்பு சட்டங்களுக்கு எதிராகவும், பாஜக ஆட்சியை இந்தியாவில் இருந்து முற்றிலுமாகத் துடைத்து எறிவோம் என்றும் சூளுரைத்தார். மேலும் இக்கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர்.தொல்.திருமாவளவன் MP., மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அடையார் பள்ளிவாசல் தலைமை இமாம் சதீதுத்தீன் பாகவி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பேராசிரியர் சுந்தரவள்ளி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், ஜாமத் தலைவர்கள், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் புதுப்பேட்டை யூசுப், துறைமுகம் அசன் அலி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #காஞ்சிபுரம்_மாவட்டம் 20.02.2020
You are here
Home > Posts tagged "எஸ்எஸ் ஹாரூன் ரசீது கண்டன"