பிப்.11.,
நாகை தொகுதியில் திருவாரூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள கிராமம் ஒன்பத்துவேளி. சென்ற ஆண்டு அங்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் ஊர் மக்கள் தங்களுக்கு ஒரு சாலை போட்டுத்தருமாறு விண்ணப்பித்தனர்.
நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களின் எல்லைக்கு அருகே உள்ளதால், இரு மாவட்ட நிர்வாகத்தினாலும் தங்கள் ஊர் புறக்கணிக்கபடுவதாக அவர்கள் புகார் கூறினர்.
மேலும் தங்களின் இருபது ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதுகுறித்து முயற்சி எடுப்பதாக கூறி சென்ற மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.
அதன் பிறகு பிரதம மந்திரி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் இச்சாலை போட முடிவானது.
மூன்று கோடியே பன்னிரண்டு இலட்சம் மதிப்பில் 2 Km நீளத்திற்கு அச்சாலைக்கான துவக்க பணிகள் தற்போது ஆரம்பம் செய்யப்பட்டிருக்கிறது.
இன்று அக்கிராமத்திற்கு வருகை தந்த மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், ஊர் தலைவரை சந்தித்து தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தந்ததாக கூறினார்.
அவருடன் ஒன்றிய சேர்மன் இராதா அவர்களும் வருகை தந்தார்.
இது குறித்து ஒன்றிய துணை தலைவர் திருமேனி அவர்களை தொடர்பு கொண்ட MLA அவர்கள், இப்பணியை சிறப்புடன் நிறைவடைய கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
அதன் பிறகு சரணியாபுரம், பொறக்குடி, தேவாதி நல்லூர், அண்ணா மண்டபம், புறாகிராமம் ஆகிய கிராமங்களுக்கு சென்றார்.
கணபதிபுரம் சென்று அங்கு உயர்நிலை பள்ளிக்கு சென்று ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
பிறகு அங்கு தனது மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் கலையரங்க பணிகளையும் பார்வையிட்டு, விரைந்து அதை திறக்கவும் கேட்டுக்கொண்டார்.
பிறகு பனக்காட்டங்குடிக்கு வருகை தந்து, அங்கு நடைப்பெறும் உயர் அழுத்த மின்மாற்றி பணிகளை பார்வையிட்டார். இதற்காக அவ்வூர் மக்கள் MLA அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொண்டனர்.
தகவல்,
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்
11-02-2021