தனிமைப்படுத்துதல் முகாமில் மரணித்த ஷெரீப் அவர்களின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு..! மஜக மாநிலப் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் மரணித்தவரின் மகனிடம் ஆறுதல் கூறினார்..!

செங்கை.ஜூன்.15.,

மலேசியாவில் இருந்து சென்னைக்கு வருகை தந்த ஷெரீப் என்பவர் நேற்று கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், அரசு தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கியிருந்த நிலையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள வட்டாச்சியா் மற்றும் தாசில்தாா் ஆகியோரிடம் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செங்கை வடக்கு மாவட்டச் செயலாளா் ஜிந்தா மதாா் அவா்கள் கலந்து கொண்டார்.

அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் நடைபெற்ற இந்த மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்று இழப்பீடு தொகையை வழங்குவதாகவும், சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,
அரசு வேலை குறித்தான விவகாரத்தில் மேலதிகாரிகளிடம் பரிசீலித்து சொல்வதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இந்நிலையில் மரணித்த ஷெரீப் அவர்களின் மகனார் அவர்கள் தந்தையின் உடைமைகளை பெற்றுக்கொள்ள கேளம்பாக்கம் பொறியியல் கல்லூரிக்கு வருகை தந்தார், மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார் மேலும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டு இருந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மஜக-வினரை அனுப்பி உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார், பொருளாளருடன் ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் பாக்கவி அவர்களும் உடனிருந்தார்.

அதன் அடிப்படையில் செங்கை வடக்கு மாவட்டச்செயலாளர் ஜிந்தா மதார், துணைச்செயலாளர்கள் தாம்பரம் ஜாகீர் உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள் உடலை பெற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கல்பட்டு_மாவட்டம்
15-06-2020