நெல்லைகண்ணன் கைதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு ஆலோசனை : மஜகமாநிலபொருளாளர்எஸ்எஸ்ஹாரூன்ரசீது_பங்கேற்பு..

சென்னை., ஜன., 02
கடந்த டிசம்பர் 29 அன்று நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நாடறிந்த பேச்சாளரும், தமிழ் கடல் என்று அழைக்கப்படும் ஐயா. நெல்லை கண்ணன் அவர்கள் பிரதமரை விமர்சித்தாக கூறி, பாஜகவினர் அவரை கைது செய்யுமாறு கெடு விதித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் அழுத்தம் காரணமாக அவரை நேற்று இரவு கைது செய்தனர். நெல்லை கண்ணனை கைது செய்யும் போது பாஜக கொடியுடன் அவரை சிலர் தாக்கினர்.

இச்சம்பவத்தை கண்டித்து சென்னையில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று 02.01.2020 காலை திரு. வேல்முருகன், அவர்கள் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது, அவர்களுடன் மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, அவர்களும் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில்…

1. மாநில அரசு உடனடியாக நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வேண்டும்.

2. கல்லூரி மாணவர்கள் மீது குண்டு வீசுவேன் என்று மிரட்டல் விடுத்த ஹெச்.ராஜா ஷர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

3. இக்கோரிக்கைகள் நிறைவேற்றப் படாவிட்டால் விரைவில் மெரினாவில் போராட்டம் நடத்தப்படும்.

எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய அமைப்புகளின் தலைவர்கள், மாணவர் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
02.01.2020