சென்னை.டிசம்பர்.15..,
கடந்த வாரம் சூடான் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்தனர்.
இந்நிலையில் படுகாயம் அடைந்தவர் நேற்றைய தினம் சென்னை திரும்பினார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் சகோதரரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மேலும் அரசு சார்பாக பெற வேண்டிய உதவிகளுக்கு மஜக துணை நிற்கும் என்றும் உறுதியளித்தனர், சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்திடுமாறு மருத்துவமனையின் RMO அவர்களை தொடர்பு கொண்டு பேசினர்.
இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மாநில இளைஞரணிச் செயலாளர் அஸாருதீன், மாணவர் இந்திய மாநிலப் பொருளாளர் பஷீர் அஹமது, மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது, வில்லிவாக்கம் பகுதி துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
15-12-2019