ஜன.23., இன்று சட்டமன்றத்தில் மாலை 5 மணியளவில் நடைப்பெற்ற அமர்வில் ஒருமனதாக ஜல்லிக்கட்டுக்கான சட்டத்திருத்த முன்வடிவு நிறைவேற்றப்பட்ட பிறகு, முதல்வர் O. பன்னீர் செல்வம் அண்ணன் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி சந்தித்து, இச்சட்டத்திருத்ததிற்காக எடுத்த முயற்சிகளுக்கு நன்றி கூறி, வாழ்த்தையும் தெரிவித்தார். பிறகு இன்றைய நிலவரங்கள் குறித்து தமது கவலையை எடுத்து கூறி, தற்போதைய போராட்டத்தை கனிவாகவும், கவனமாகவும் காவல்துறை கையாள அறிவுறுத்துமாறு முதல்வரிடம் கேட்டுக்கொண்டார். பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், உலகமே உன்னிப்பாக கவனித்த ஜல்லிகட்டு தொடர்பான சட்டத் திருத்தம் ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பாராட்டியவர், இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றும், 100 சதவீதம் அவர்கள் இதற்கு உரிமை கொண்டாடலாம் என்றும் கூறினார். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் மாணவர்களும், இளைஞர்களும் அறவழியில் போராட்டத்தை முடித்து ஜல்லிக்கட்டை எல்லா இடங்களிலும் நடத்திட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பிறகு சட்டசபைக்கு வந்த இயக்குனர் கௌதமனிடமும், அவர் தலைமையில் வந்த மாணவர்களிடமும் இதை வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டு போராட்டக்குழு தலைவர் ராஜசேகர் அவர்கள் அங்கு வந்து, மஜக பொதுச்செயலாளர் தமிமுன்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
காஞ்சி வடக்கு மாவட்டம் மாணவர்கள் போராட்டத்தில் மஜக மற்றும் மாணவர் இந்தியா…
ஜன.22., காஞ்சி வடக்கு மாவட்டம் மஜக மற்றும் மாணவர் இந்தியா சார்பில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மாணவர்களுடன் கலந்துகொண்டு உணவுகள் வழங்கியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர்... தகவல் : மாணவர் இந்தியா ஊடகபிரிவு, காஞ்சி வடக்கு. 22_01_17
மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் 7ஆவது நாளாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த பல்வேறு நிகழ்வுகள்…
ஜன.22., மதுரை வடக்கு மாவட்டத்தில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக நடைபெறும் ஆர்ப்பாட்டக்கள் மற்றும் மறியல்களில் மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மதுரை அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உணவு பொட்டலங்கள் குளிர்பானம், தண்ணீர் பாக்கெட் வழங்கப்பட்டது. * மதுரை தமுக்கத்தில் மாணவர்கள் சார்பாக நடைபெறும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட பொருளாளர் புதூர் சாலி மாவட்ட துணைசெயலாளர் வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் மஜக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டடு உணவு பொட்டலங்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. மற்றும் தமுக்கம் அந்த பகுதியில் துப்புறவு செய்யும் பணிகள் நடைபெற்றது. * உயர்நீதி மன்றம் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட மற்றும் ஊர்வலத்தில் மஜக மதுரை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் ஜமாலுதீன் கலந்து கொண்டர். * மதுரை ஒத்தக்கடை பகுதி மக்கள் சார்பாக நடைபெற்ற மறியல் மஜக மாவட்ட துணைசெயலாளர் ஒத்தக்கடை பரூக் தலைமையில் சுலைமான், சிக்கந்தர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டர்கள். * மலையாைத்தான் பட்டியில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சசிகுமார் தலைமையில் மஜக
குடியாத்தம் நகரில் ஜல்லிக்கட்டு ஆதரவாகவும் பீட்டாவை தடை செய்ய கோரி நடைபெற்ற போராட்ட களத்தில் மஜக…
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் மஜக…
ஜன.21., பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை கண்டித்து இன்று 21.1.17 மாலை 4.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பெரியார் திராவிடர் கழகம் இராமகிருட்டிணன், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், அமீர் அப்பாஸ், ரபீக், பாருக் மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாவட்ட செயற்குழு பூ.காஜா, இப்ராஹிம், EBR பகுதி நிர்வாகிகள் ஷாஜகான், காஜா, அப்பாஸ், ஜக்கிரியா உசேன் மற்றும் அனைத்து கிளை கழக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(IT-WING), கோவை மாநகர் மாவட்டம் 21_01_17