விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் மகபுஜான் அவர்களின் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் முழுவதும்
மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தல், நடப்பு மாதத்தில் விருதுநகர் மாவட்டம்
சாத்தூரில் கண் மருத்துவ முகாம் நடத்தவது என்றும், ராஜபாளையத்தில் கம்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும் மேலும் கம்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், “மக்களுடன் மஜக” செயல் திட்டத்தின் கிழ் ராஜபாளையத்தில் அரசு திட்டங்கள் அனைத்தும் தீவிரப்படுத்த கோரி அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கவும், மேலும் மாவட்ட முழுவதும் தெருமுனை
கூட்டங்கள் நடத்துவது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர்
க. தமீமுன் அன்சாரி உள்ளிட்ட மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.