மஜக இல்ல திருமணம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, அவர்களின் சகோதரர் திருமணம் இன்று காயல் பட்டினத்தில் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், இணை பொதுச் செயலாலர் J.S.ரிஃபாயி, ஆகியோர் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்தினர்.

இதில் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயக்குமார், டாக்டர் K.V.S.ஹபீப் முகம்மது, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சமூக ஆர்வலர் வழக்கறிஞர் N.M.அஹம்மது ஸாஹிப், அவர்கள் அனைவரையும் வரவேற்றார், துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது ,நாகை முபாரக், மற்றும் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், பொருளாளர் ராசுக்குட்டி, மாவட்ட துணை செயலாளர் மீரா சாகிப் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், தென்காசி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஃபிஜ்ருல் ஹஃபிஸ் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜாஹிர் உசேன், ருல்பிகர் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய,நகர நிர்வாகிகள் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
25.12.2021