நெல்லை மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் இணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ, துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான ஹாரிஸ் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் “மக்களுடன் மஜக” நிகழ்வுகளை இம்மாதம் முழுவதும் வீரியமாக முன்னெடுப்பது என்றும், மேலும் எதிர்வரும் பிப்ரவரி-28 அன்று கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கொடியேற்று நிகழ்வுகளை முன்னெடுப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.