நெல்லையில் … மஜக பொதுச்செயலாளருடன் உலமாக்கள் சந்திப்பு…

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டைக்கு வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மாவட்ட செயலாளர் நெல்லை. நிஜாம் அவர்களின் புதிய ட்ராவல்ஸ் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அப்போது மாநகரத்தை சேர்ந்த உலமாக்கள் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினர்.

மஜக-வின் பணிகளுக்கு அவர்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.

பிறகு ‘மக்களுடன் மஜக’ பணிகளை கிளை வாரியாக முன்னெடுப்பது குறித்தும், அது சார்ந்த ஆயத்த வேலைகள் குறித்தும் மாவட்டச் செயலாளரிடம் பொதுச் செயலாளர் கேட்டறிந்தார்.

ஜனவரி 25 முதல் பல கட்டங்களாக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.