திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம் மேலிட பொறுப்பாளரும், மாநில துணை செயலாளருமான வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று கட்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

பிறகு பலரின் ஆலோசனைகள்படி திருச்சி மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டது.

திருச்சி கிழக்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, முசிறி, தொகுதிகளும், திருச்சி மேற்கு மாவட்டத்தில் திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், மணப்பாறை தொகுதிகளும் இனி செயல்படும் என வரையறுக்கப்பட்டது.

ஜூலை இறுதியில் தனித்தனியே மாவட்ட பொதுக்குழுக்கள் நடைபெறும் என்றும், அதில் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்படும் என்றும், அதுவரை இரண்டு மாவட்டங்களுக்கும் தற்காலிக அமைப்புக்குழு செயல்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

புதிய கிளைகள் கட்டமைப்பு, உறுப்பினர் சேர்ப்பு, புதியவர்களுக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.