தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் இன்று கும்பகோணத்தில் மேலிட பொறுப்பாளரும், மாநில துணை செயலாளருமான அகமது கபீர் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று கட்சிப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஜூலை மாதம் நடைபெற உள்ள மாவட்ட பொதுக்குழு குறித்தும், அதற்கு கிளை சீரமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சான்றோர் சந்திப்பு நிகழ்ச்சிகள், மாணவர் முகாம்கள், புதியவர்கள் வரவு ஆகியவை குறித்தும் பேசப்பட்டது.