அறந்தாங்கி முபாரக் அலிக்கு ஆறுதல்… மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் வருகை!

மஜகவின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தாங்கி முபாரக் அலி அவர்களின் தந்தையும், தாயும் அடுத்தடுத்து இறந்தனர்.

அவருக்கு ஆறுதல் கூற, பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று அவரது வீட்டிற்கு வருகை தந்தார்.

அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா நாசர், துணைப் பொதுச் செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தர்ஷா மற்றும் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோர் உடன் வருகை தந்தனர்.

பிறகு அங்கு வருகை தந்த நிர்வாகிகளுடன் ‘மக்களுடன் மஜக’ பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் பேராவூரணி சலாம், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஹாஜா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அறந்தாங்கி அஜ்மீர் அலி, திருப்பத்தூர் மஜிது மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, துணை செயலாளர் ஹமீது, அறந்தாங்கி நகர தொழிற்சங்க தலைவர் சோலைமலை, மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் முகம்மது இளைஞர் அணி செயலாளர் பைசல், பேராவூரணி நகர செயலாளர் முஜீப் ரஹ்மான், மாணவர் இந்தியா செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.