அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியுடன்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு…

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சமீபத்தில் சந்தித்து உரையாடினார்.

அவருடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக் ஆகியோரும் உடன் சென்றனர்.

அப்போது மஜக சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகள் மனுவாக கையளிக்கப்பட்டது.

அவை.

1. பின்லாந்து நாட்டில் நடைமுறையில் இருக்கும் எளிய வழி கல்வித்திட்டத்தை தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்துவது.

2. சில தனியார் பள்ளிக்கூடங்களில் வாரந்திர விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகளை வலுக்கட்டாயமாக நடத்துவதை தடுப்பது

3. பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும், அடுத்த நாளும் தேர்வுகளை நடத்துவதை தவிர்ப்பது

என இம்மூன்று கோரிக்கைகள் குறித்து அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அமைச்சரும், பொதுச்செயலாளரும் கடந்த சட்டமன்ற பேரவையில் நல்ல நண்பர்களாக தோழமை பேணியதை நினைவு கூர்ந்து உரையாடினர்.