மலேசியாவில் தமிழகத்தை சேர்ந்தவர் மரணம்.. தீவிர கிசிச்சைக்கு உதவி செய்த MKP!

மலேசியாவில் கொரோனாவில் பாதிக்கபட்டு தீவிர சிகிச்சையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த வீரராகவன் என்ற சகோதரர் நேற்றைய தினம் இறந்து விட்டார்.

முன்னதாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கபடுவது குறித்தான தகவல் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெளிநாட்டு சார்பு அமைப்பான கத்தார் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவைக்கு கிடைத்தது.

கத்தார் மண்டல செயலாளர் யாஸின் அவர்கள் மலேசியாவில் உள்ள ஜொகுர் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவையின் பொருளாளர் சகோதர் சுல்தான் அவர்களை தொடர்புகொண்டு இது குறித்த விபரம் தெரிவிக்கபட்டது.

சகோதரர் சுல்தான் அவர்கள் மருத்துவமனையை தொடர்புகொண்டு நிலைமையை அறிந்து தொடந்து கிசிச்சையை கண்காணித்து வந்தார் மேலும் தீவிர சிகிச்சைக்கான பணிகளையும் முன்னெடுத்தார்.

எனினும் வீரராகவன் இறந்து விட்டார்.

அவரது இறுதி நிமிடங்களில் மலேசிய MKP சொந்தங்கள் ஆற்றிய சேவையை அக்குடும்பத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர்.

தகவல்;.
#மனிதநேய_கலாச்சார_பேரவை
ஜொஹர் (மலேசியா)
கத்தார் மண்டலங்கள்
12.09.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.