மாதாவரத்தில் பரப்புரை…. நிலமெல்லாம் ரத்தம் (பலஸ்தீன வரலாறு) நூலை முதல்வரிடம் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வழங்கினார்….

ஏப்ரல்.15.,

இன்று காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் – வட சென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோரை ஆதரித்து மாதாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார்.

அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முதல்வருக்கு பாலஸ்தீன விடுதலை போர் தொடர்பாக பா.ராகவன் எழுதிய

‘நிலமெல்லாம் ரத்தம்’ என்ற நூலை பரிசளித்தார்.

காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் பாலஸ்தீன விடுதலை குறித்த இந்நூலை மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி முதல்வருக்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
15.04.2024.

மத்திய சென்னை… எழுச்சியை ஏற்படுத்திய Road Show… தயாநிதி மாறனை ஆதரித்து நடந்த பரப்புரை… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

ஏப்ரல்.15.,

மத்திய சென்னை தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து நடந்த “Road Show” பரப்புரையில் இன்று மனிதநேய ஜனநாய கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தனர்.

திமுக பகுதி செயலாளர் பெரியமேடு சுதாகர் அவர்களது ஒருங்கிணைப்பில்
மஜக மத்திய சென்னை மாவட்ட செயலாளர் காஜா மொய்தீன் தலைமையில் திரளான மஜக-வினர் பங்கேற்றனர்.

மாலை 5.30 மணியளவில் பெரியமேடு மசூதி அருகில் தொடங்கிய Road Show இரவு 9.30 மணிக்கு புளியந்தோப்பு பகுதியில் நிறைவுற்றது.

வழியெங்கும் மக்கள் வெள்ளத்தில் பரப்புரை வாகனம் செல்ல ; பூக்களை தூவி வரவேற்று ஆதரவு நல்கினர்.

சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இப்பரப்புரை குறித்து சன் நியூஸ் தொலைக்காட்சியில் பேசிய மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், ‘சமீபத்தில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்று Road Show-வை விட இதில் மக்கள் கூட்டம் அதிகம் என்றும், ஒரு தொகுதிக்குட்பட்ட மக்கள் மட்டுமே பங்கேற்றதை பார்க்க முடிந்தது என்றும் பேட்டியளித்தார்.

இந்நிகழ்வில் இருநூறுக்கும் மேற்பட்ட மஜக நிர்வாகிகள் கொடிகளுடன் பங்கேற்றனர்.

நிறைவாக தலைவரிடம் நன்றி கூறிய தயாநிதி மாறன், மஜக நிர்வாகிகளை அழைத்து படம் எடுத்துக் கொண்டர்.

இதில் மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், நெய்வேலி இப்ராஹீம், வல்லம் கபீர் மற்றும் மாநில துணைச் செயலாளர்கள் அஸாருதீன், பேராவூரணி சலாம், ஹாரீஸ், எஸ்.எம்.நாசர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், வழக்கறிஞர் பாசறை செயலாளர் அமீன் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_மாவட்டம்

வேலூரில்… படை திரண்டு சுழலும் மஜகவினர்…. வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பு….

ஏப்ரல்.15.,

வேலூர் தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியினர் தீவிரமாக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்

மஜக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையில் நடைபெறும் சூறாவளி பரப்புரையில் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் களமிறங்கி பரப்புரை செய்து வருகின்றனர்

மஜக-வினரின் இந்த பரப்புரையை முன்னாள் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது சகி அவர்கள் வியந்து பாராட்டினார்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
14.04.2024.

வேலூரில்… இந்தியா கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு… தீவிரமாக வாக்கு சேகரித்த மஜகவினர்..

ஏப்ரல் – 15.,

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில், இந்திய கூட்டணிக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் திரு D.M கதிர் ஆனந்த் அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் ஏஜாஸ் தலைமையில் மஜக-வினர் வாக்குகளை சேகரித்தனர்.

மஜக-வினர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொடிகளுடன் களமிறங்கி வீதி, வீதியாக துண்டு பிரசுர பரப்புரைகளை முன்னெடுத்தனர்.

இதில் மஜக வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நபிஸ், வேலூர் மாநகர செயலாளர் சையத் தாவூத், நகர துணை செயலாளர் சையத் நாசிர், ஹுசேன், கவுஸ் பாஷா மற்றும் திரளான மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
13.04.2024.

மாணவர் இந்தியா நியமன அறிவிப்பு….

மாணவர் இந்தியாவின் மாநில பொருளாளராக,

மு.நிசாத் அம்ரித் அன்சார்
1/107 D2 வளையல் காரத் தெரு,
ஏனங்குடி, நாகை
அலைபேசி; 83442 42608

மாணவர் இந்தியாவின் மாநில துணைத்தலைவராக,

S.முகமது பைசல் M.COM
த/பெ; A .சுஜ்ஜாவுதீன்
281, பூதக்கேணி மெயின் ரோடு, பள்ளிப்படை சிதம்பரம் 608001
அலைபேசி; 95972 40149

ஆகியோர் நியமனம் செய்ய படுகிறார்கள், மாணவ சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

இவண்;
S.பஷீர் அஹமத் M.B.A
மாணவர் இந்தியா
மாநில தலைவர்
10.04.2024.