சிறகிருந்தால் போதும்.. சிங்கப்பூர் நூல் வெளியீட்டு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA.,

புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் “சிறகிருந்தால் போதும்…” நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கவிமாலை நடத்திய இந்நிகழ்வில் கோவை PSG கலை கல்லூரியின் முன்னாள் பேராசிரியை #ஜெயந்திஸ்ரீ_பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றார். சிங்கப்பூர் தொழில்அதிபர் S.M.அப்துல் ஜலீல், கவிமாலை காப்பாளர் மா.அன்பழகன், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் பரியுல்லா, தமிழ்மொழி […]

image

image

image

image

புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜஹாங்கீர் அவர்களின் “சிறகிருந்தால் போதும்…” நூல் வெளியீட்டு விழா இன்று 05-03-2017 சிங்கப்பூரில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கவிமாலை நடத்திய இந்நிகழ்வில் கோவை PSG கலை கல்லூரியின் முன்னாள் பேராசிரியை #ஜெயந்திஸ்ரீ_பாலகிருஷ்ணன் அவர்களும் பங்கேற்றார்.

சிங்கப்பூர் தொழில்அதிபர் S.M.அப்துல் ஜலீல், கவிமாலை காப்பாளர் மா.அன்பழகன், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க தலைவர் அல்ஹாஜ் பரியுல்லா, தமிழ்மொழி பண்பாட்டுக் கழக தலைவர் அரிகிருஷ்ணன்,  பெண்கூலின் பள்ளிவாசல் நிர்வாகக்குழு துணை தலைவர் அல்ஹாஜ் M.Y.முகம்மது ரபீக், பெரியார் சமூக சேவை மன்றத்தின் பொருளாளர் மாறன் நாகரத்தினம், கவிஞர் பிச்சனிக்காடு இளங்கோ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்களுக்கு இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு (FIM) தலைவர் நாகூர் கெளஸ் அவர்கள் நிணைவு பரிசை வழங்க, தோப்புத்துறை (TMAS) சங்க தலைவர் தீன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

“மனிதநேயம்” என்ற தலைப்பில் உரையாற்றிய பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி.MLA அவர்கள் நாகப்பட்டினத்திற்கும், தென்கிழக்காசியாவிற்கும் இடையில் இருக்கும் வரலாற்று தொடர்புகளையும், நாகப்பட்டினம் தொகுதி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் செய்த தமிழ் இலக்கிய, இதழியியல் பணிகளையும் ஆதாரங்களுடன் எடுத்துக்கூற அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்துகொண்டே இருந்தது.

தனக்கும் சிங்கப்பூருக்குமான 25 ஆண்டுகால தொடர்பை விவரித்தவர் சிங்கப்பூர் தமிழர்களின் பாராட்டுகளையும் தட்டிச்சென்றார்.

மனிதநேயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்தும், இயேசு (ஈசா அலை), கெளதம புத்தர் ஆகியோரின் தடங்களிலிருந்தும், அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளிலிருந்தும் தனக்கே உரியபாணியில் அழகாக எடுத்துக்கூறி அரங்கை வென்றெடுத்தார்.

அரசியல் சாராத, இலக்கிய-மனிதநேய இதழியியல் சொற்பொழிவாக அவரது உரை அமைந்ததாக அனைவரும் பாராட்டினர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய கலாச்சாரப் பேரவை
#MKP_IT_WING
சிங்கப்பூர் மண்டலம்

0 comments

Sign In

Reset Your Password

Email Newsletter