இரண்டாம் ஆண்டில் மஜக

இரண்டாம் ஆண்டில் மஜக

image

வாணியம்பாடியில் ஜாமியத்துல் உலமா மற்றும் மஜ்லிஸூல் உலமா அமைப்புகள் இணைந்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் முத்தலாக் மசோதாவை திரும்ப பெற வலுயுறுத்தியும், பாஜகவின் அரசியல் சாசன விரோதம் போக்கையும் கண்டித்து பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் திருச்சி வேலுச்சாமி (காங்கிரஸ்) ப.ழ. கருப்பையா (திமுக) M.தமிமுன் அன்சாரி MLA (மஜக), வழக்கறிஞர் அந்திரிதாஸ் ( மதிமுக),
அபுபக்கர் MLA (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லவி ரஹமத்துல்லா (அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்), அப்துல் சமது(மனிதநேய மக்கள் கட்சி), சையது அஹ்மத் ஹீசைனி (வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா), முகம்மது ஆசாத்(SDPI), இனாமுல் ஹக் சாயபு (ஜாமியத் உலமா), சையத் அப்துல் ரஹ்மான் (நகர தலைமை காஜி) உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் 1500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்.
12.01.18

image

நாகை தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சியில் ஜமாத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த சகோதர்கள் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

அவ்வூர்க்கு வருகை தந்த பொதுச்செயலாளருக்கு ஜமாத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து சிக்கல், பொராவாச்சேரி  ஊராட்சியில் மஜக கொடியை பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, நாகை ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சுல்தான், மாவட்ட விவசாயிகள் அணி துணை செயலாளர் ஜலாலூதீன், நாகை நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜிஸ் ரஹ்மான், மற்றும் தமீஜூதீன், கிளை நிர்வாகிகள் சதாம், சகாபுதீன் உள்ளிட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நாகை_தெற்கு_மாவட்டம்
26.12.17

image

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை ஒன்றியம் பொரவச்சேரி, சிக்கல் ரேஷன் கடைக்களுக்கு வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை என்று புகார் கூறினார்கள். உடனடியாக வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு, மேற்கண்ட பொருட்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிறகு, ஆழியூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2017_18) ரூபாய் 4.000.00 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கல்வெட்டு பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17.

image

சுனாமி ஆழி பேரலை தாக்கியதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அதன் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாகை மாவட்டம் எங்கும் உருக்கமாக நடைப்பெற்றது.

இன்று அரசு சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன், M.தமிமுன் அன்சாரி MLA, கலெக்டர் சுரேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் மற்றும் அதிகாரிகளும், பொது மக்களும், மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர்.

அதன் பிறகு நம்பியார் நகரில் பஞ்சாயத்தார்கள் சார்பில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அமைச்சர் ஓ.எஸ் மணியன் மற்றும் தமிமுன் அன்சாரி MLA ஆகியோர் பங்கேற்றனர்.

பிறகு, கீச்சாங்குப்பத்தில் நடைப்பெற்ற அமைதி ஊர்வலத்திலும் அங்கு பள்ளிக் கூடத்தில் நடைப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
26.12.17

image

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஐ.மீரான் தானாக முன் வந்து இராஜினாமா செய்ததின் பேரில் மாவட்ட செயலாளர் பதவிக்கு மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் வகித்து வந்த நிலா சாதிக் அவர்களை ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் செய்யது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள்  அல்லாபிச்சை, புளியங்குடி ஷாஜகான், பொன்னானி அபுதாஹிர், மாவட்ட தொண்டர் அணி செயளாலர் செய்யது அபுதாகிர், மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் மாஸ் காஜா, புளியங்குடி நகர செயளாலர், புளியங்குடி நகர துணை செயளாலர் ஷேக் முகம்மது, தென்காசி நகர செயலாளர் செய்யது அலி, தென்காசி நகர துணைச் செயலாளர் மைதின் பிச்சை ராசப்பா, தென்காசி நகர பொருளாளர் அம்ஜத் கான், அசன் கனி ஒன் காசி நகர துணை செயலாளர், முகைதீன் தென்காசி நகர மருத்துவ அணி மற்றும் வார்டு நிர்வாகிகள் , மாணவர் இந்தியா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
#நெல்லை_மேற்கு_மாவட்டம்.
25.12.17

image

மனிதநேய ஜனநாயக கட்சி ஓராண்டை கடந்த நிலையில் பல வரலாற்று நிகழ்வுகளை அரங்கேற்றியுள்ளது. பதிவு செய்யப்படாத நிலையிலேயே, அரசியல் அங்கீகாரத்தையும், தேர்தல் வெற்றிகளையும் பெற்ற கட்சி தமிழகத்தில் மஜகவாகத்தான் இருக்கக் கூடும். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

தற்போது நெடிய உழைப்புக்குப் பிறகு தேர்தல் ஆணையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஈர நிலத்தில் விழுந்திருக்கும் விதையான மஜக, தற்போது வேலி அமைத்து வீரியமாக புறப்பட்டிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என மஜகவின் எழுச்சிமிக்க பயணத்தில் இணைந்திருப்போருக்கு இது ஒரு வசந்தகால செய்தியாகும்.

கட்சியை பதிவு செய்வதில் முனைப்புக் காட்டி பணியாற்றிய தலைமை நிர்வாகிகள் S.S.ஹாரூண் ரஷீத், மெளலா. நாசர், N.தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா ஆகியோருக்கும், ஜாவித், ஷமீம், அணீஸ் ஆகிய துடிப்புமிக்க இளம் சகோதரர்களுக்கும், இப்பணியில் உழைத்த இதர தலைமை நிர்வாகிகளுக்கும் கட்சியின் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தம்பி ஜாவித் பலமுறை டெல்லிக்கு சென்று இப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இறைவன் நமது பணிகளை அங்கீகரிக்க பிராத்திப்போம்!

அன்புடன்,

M.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
08.06.2017

image

image

image

image

தஞ்சை.ஏப்.29., தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நேற்று 28-04-2017 வெள்ளிக்கிழமை மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் வல்லம் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.

நூருல் அமீன் ரஹ்மானி அவர்கள் நீதிபோதனை வழங்க நகர செயலாளர் முகம்மது செல்ல ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட பொருளாளர் தஞ்சை ஜப்பார், அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாவட்ட நிர்வாகிகள், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர் கிளைகளின் செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, மாநில துணைப் பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், முன்னாள் மாநில அமைப்புச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அஹமது உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியினை குவைத் மண்டல செய்தி தொடர்பாளர் அப்துல் சமது தொகுத்து வழங்கினார். இறுதியாக நகர பொருளாளர் சாகுல் ஹமீது நன்றி உரை ஆற்றினார்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
தஞ்சை தெற்கு மாவட்டம்
28-04-2017

image

image

image

திருப்பூர், ஏப் :24., திருப்பூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் திருப்பூரில் கொடியேற்றி வைத்து புதிய  மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில இணை பொதுசெயலார் மைதீன் உலவி, துணை பொதுசெயலாளர்
ஈரோடு பாருக், மாநில செயலாளர் கோவை சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர்  திண்டுக்கல் அன்சாரி, கொள்கை விளக்க செயலாளர்கள் கோவை நாசர், திருப்பூர் ஹைதர்அலி, விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .

இதில் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், அதிகபடியாக  உறுப்பினர் சேர்பது எனவும் முடிவு செய்யபட்டது.

தகவல் :-
தகவல் தொழில் நுட்பஅணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்
23.4.2017.

image

image

திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக A.T.R.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
தொழிலில் ஏற்பட்ட நலிவின் காரணமாக கட்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய கண்ணன் அவர்களிடம்.
தொழில் பாதிப்பு ஏற்படாமல் கட்சி பணியாற்றி சமூகத்திற்கு பணியாற்ற மாநில செயலாளர் சுல்தான் அவர்கள் அறிவுறித்தினார்கள்.

இதையடுத்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து பணியாற்றுவதாக கண்ணன் அவர்கள் உறுதியளித்தார்.

நிர்வாகிகள் கூட்டத்தில்  கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.தற்போது இருக்கும் நிர்வாகம் கட்சி பணியில் மிகுந்த வீரியத்தோடும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என
முடிவு செய்யப்பட்டது.

2.இனி தொடர்ந்து மாதம் 20.முதல் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

3.வரும் ஞாயிற்றுக்கிழமை 23.4.2017 அன்று மாலை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து திருப்பூர் மாவட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியையும், மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்கம் முன்னிட்டு
மஜக கொடியேற்றும் நிகழ்ச்சியும்
நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  மாவட்ட செயலாளர் பஷீர், மாவட்ட துணைச் செயலாளர்கள் கண்ணன், முஸ்தாக், ரஹமத்துல்லா, மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் அபுபக்கர் சித்தீக், வர்த்தகர் அணி செயலாளர் ரபீக், மீனவர் அணி செயலாளர் சர்புதீன், இளைஞர் அணி துணைச்செயலாளர் உமர் கத்தாப், மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் சகாப்தீன்,
தொழிற்சங்க செயலாளர் ரஹ்மான், சிறப்பு அழைப்பாளர் அக்பர் அவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்.
19.04.2017

image

image

image

திருவாரூர்.மார்ச்.26., திருவாரூர் மாவட்ட மஜக சார்பில் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது .

திருவாரூர் நகரம் , கொடிக்கால்பாளையம் மற்றும் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 8 இடங்களில் மஜக கொடிகளை மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை H.சேக் அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்றினர் .

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், மாவட்ட பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அத்திக்கடை லியாகத் அலி கட்டிமேடு அய்யூப் கான் அடியக்கமங்கலம் நிஜாமுதீன் மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி செயலாளர் பொதக்குடி அசாருதீன் வர்த்தக அணி செயலாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா தொழிற்சங்க அணி செயலாளர் புலிவலம் ஷேக் தாவூத், மீனவர் அணி செயலாளர் செய்யது மீரான் விவசாய அணி செயலாளர் பொதக்குடி நத்தர் கனி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் கூத்தாநல்லூர் ஜபுருல்லாஹ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :

மஜக தகவல் தொழில் நுட்ப அணி  ( MJK-IT WING)
திருவாரூர் மாவட்டம்

Sign In

Reset Your Password

Email Newsletter