முகப்பு


டிச.05, சிதம்பரம் இரயில் நிலையம் இந்திரா நகரில் மழைவெள்ள நீரால் சூழப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சுமார் 300க்கும் அதிகமான குடும்பங்களுக்கு மஜக பேரிடர் மீட்பு குழுவினர் உணவு விநியோகம் செய்தனர். முன்னதாக உணவுகளை தயார் செய்து மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்குள் பைபர் மிதவையில் உணவுகளை பொட்டலங்களை எடுத்து சென்று நீரில் இறங்கி உணவுகளை அம்மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கினர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் மஜக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்பில் இருந்து வருகின்றனர். எதிர்பாராத வகையில் பெய்த மழையினால் கடலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக உள்ளது. மாவட்டம் முழுவதும் மஜகவினர் உசார் படுத்தப்பட்டு களத்தில் இருந்து வருகின்றனர். தகவல்; #மஜக_பேரிடர்_மீட்பு_குழு #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
டிச.04, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க கடலூர் மாவட்டம் வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்‌.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் ஆயங்குடிக்கு வருகை தந்திருந்தார். அவரை ஆயங்குடி பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் மாலிக் மற்றும் ஜமாத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினர். தொடர்ந்து ஆயங்குடி மஜக பேரிடர் மீட்பு குழுவினரின் பணிகளை கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் நகர நிர்வாகிகள் புருஹானுதீன், சாதுல்லா (ஊராட்சி வார்டு உறுப்பினர்), அன்வர்தீன் உள்ளிட்டவர்கள் இருந்தனர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை மஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தாயகம் வருகை புரிந்துள்ள MKP கத்தார் மண்டல செயலாளர் யாசின்
டிச.03, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை கைகாட்டி மற்றும் சாவடி உள்ளிட்ட இடங்களில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் ஏற்றும் நிகழ்வு எழுச்சியோடு நடைப்பெற்றது. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வருகை தந்திருந்த மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரசீது அவர்கள் எழுச்சிமிகு கோசங்களுக்கு மத்தியில் அவ்விடங்களில் கொடிகளை ஏற்றி வைத்தார். இதில் மாநில துணை செயலாளர் இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் பொருளாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் ஜாகீர் ஹுசைன் உள்பட மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
டிச.03, கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் மஜக வின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) துபை மாநகர பொருளாளர் பயாஜ் அஹமது இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இத்திருமணத்தில் மஜக மாநில பொருளாளர் S.S ஹாருன் ரஷீது கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், IT Wing மாநில பொருளாளர் AHM ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் O.R ஜாகிர் ஹுசைன், மாவட்ட பொருளாளரும், ஆயங்குடி ஊராட்சி மன்ற தலைவருமான A.S பஜில் முஹம்மது, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் யூசுப், MKP கத்தார் மண்டல செயலாளர் யாசின், துணை செயலாளர் அப்துர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புரெவி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட மஜக பேரிடர் மீட்பு குழுவினர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் #puravicyclone #மஜக_பேரிடர்_மீட்புக்குழு 02.12.2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*