மார்ச்.12, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டக் குழு ஏற்பாட்டில் CAA,NRC,NPR ஐ கண்டித்து 5 நாட்கள் தொடர் தர்ணா போராட்டம் நாகையில் நடைப்பெற்று வருகிறது. நான்காம் நாள் போராட்டமான இன்று மஜக சார்பில் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி அவர்கள் பங்கேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கெதிராக கண்டன உரை நிகழ்த்தினார். டெல்லி ஷாகின்பாக் போராட்டக்களத்தின் ஒழுங்கமைப்பையும், அதன் இன்று நாடு முழுவதும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை குறிப்பிட்டு போராட்டக்களத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். இதில் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, மாவட்ட அணி செயலாளர்கள் தெத்தி ஆரிப், ரெக்ஸ் சுல்தான், மு.MJVS செயலாளர் ஜாசிம், நாகை ஒன்றிய துணைச் செயலாளர் சதாம் உள்பட மஜகவினர் திரளானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
அடியக்க மங்கலத்தில் நடைப் பெற்று வரும் தொடர் இருப்பு போராட்டத்தில், மஜக துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரை!
மார்ச்.12, திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலத்தில் குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம் எழுச்சியோடு நடைபெற்று வருகிறது. இப்போராட்ட களத்தில் மஜக சார்பில் துணைப் பொதுச் செயலாளர் மன்னை செல்லச்சாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில், மஜக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், பொருளாளர் புலிவலம் சேக் அப்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜம்ஜம் ஷாகுல் மற்றும் அடியற்கை, புலிவலம், கூத்தாநல்லூர் பகுதிகளை சேர்ந்த மஜகவினரும் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #திருவாரூர்_மாவட்டம். 11/03/2020
மேலப் பாளையத்தில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக இணை பொதுச் செயலாளர் JS ரிபாய் ரஷாதி பங்கேற்பு..!
திருநெல்வேலி.மார்ச்.12., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பஜார் திடலில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (11-03-2020) இரவு மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளர் மெளலவி.J.S.ரியாப் ரஷாதி அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தினார், மேலப்பாளையம் போராட்டத்தில் 3-வது முறையாக உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.. உடன் மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருநெல்வேலி_மாவட்டம் 11-03-2020
மங்கலம் பேட்டை தொடர் தர்ணாப் போராட்டத்தில்.. மஜக மாநில துணைச் செயலாளர் நெய் வேலி இப்ராஹிம் கண்டன உரை!
மார்ச் 12, கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில் தொடர் காத்திருப்பு தர்ணா போராட்டம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூன்றாம் நாள் போராட்டமான நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது யூசுப், APM சலீம் மற்றும் மங்கலம்பேட்டை நகர நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம். 11/03/2020
பல் தேசிய இனங்களை துண்டாட துடிக்கும் பாசிச பாஜக அரசு! நாமக்கல் காத்திருப்பு போராட்டத்தில் மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமத் உரை!
நாமக்கல்:மார்ச்.12., குடியுரிமை திருத்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் நாமக்கல் பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம்அஹமது, அவர்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் பல் தேசிய இனத்தை, சிறுபான்மையினரை ஆதிவாசிகளை துண்டாட துடிக்கின்றது மத்தியில் ஆளும் பாஜக அரசு சங்பரிவாரங்களை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையும், கலவரத்தையும் தூண்டுகின்ற முயற்சியில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டிய அவர், காவல் துறையின் மெத்தனப் போக்கு கலவரகாரர்களுக்கு ஊக்கமளிப்பதாக குற்றம் சாட்டினார். போராட்டத்தில் திரளான பெண்களும், ஆண்களும், பங்கேற்றனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஈரோடு பாபு ஷாகின்ஷா, நாமக்கல் மாவட்ட செயலாளர் சையத் கபீர், மாவட்ட துணை செயலாளர் மன்சூர் அலி, MJTS செயலாளர் ஜான் பாஷா, மாவட்ட பொருளாளர் மகபூப் பாஷா,சகன் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாமக்கல்_மாவட்டம் 11.03.2020