சென்னை.ஆக.15., தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக தியாகராயநகர் அரசு மேல்நிலை பள்ளியில் மாவட்ட துனை செயலாளர் A.ராஜாமுஹம்மது,தலைமையில் மாவட்ட துனை செயலாளர் A.ஸ்டிபன் முன்னிலையில் இரத்ததான முகாம் நடைபெற்றது . சிறப்பு அழைப்பாளராக #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் மாநில பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீது M.com, மாநில செயலாளர் J.சீனிமுஹம்மது,மாநில துனை செயலாளர் முஹம்மது சைஃபுள்ளாஹ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மற்றும் மு.மாநில இளைஞர் அணி துனைசெயலாளர் N.அன்வர்பாஷா, மாநில கொள்கைவிளக்க பேச்சாளர் J.s.மீரான்,தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தெ.செ.கி.மாவட்ட செயலாளர் M.அப்துல்கைய்யூம்,தெ.செ.மே. மாவட்ட செயலாளர் அப்துல் காதர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது இஸ்மாயில்,ஷேக்மதார்,அம்ஜத்கான்,பன்னீர்,செய்யதுஒலி், மணிகன்டன்,மற்றும் காதர்,யூசுப்,டேவிட்,ஆகியோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இரத்ததானம் அளித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #தென்சென்னை_மாவட்டம் 15.08.2018
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
திருவண்ணாமலையில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மஜகவினர் பங்கேற்ப்பு..!
திருவண்ணாமலை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கம் வட்டம் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு சுகந்திர தின கொடி ஏற்றி வைத்து பள்ளி குழந்தைகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் மஜக மாவட்ட செயலாளர் காஜாஷரிப், மாவட்ட துணை செயலாளர் அப்பு, MJVS மாவட்டச் செயலாளர் முஹம்மது ஹனீப, ஒன்றிய செயலாளர் தாஜூதீன் மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் ஜானி பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவண்ணாமலை_மாவட்டம்
சுதந்திர தின அணி வகுப்பு..! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு..!!
சென்னை.ஆக.15., இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடியார் கொடியேற்றினார். மழை தூறல்களுக்கிடையே தமிழக அரசின் சாதனைகளை கூறும் ஊர்தி அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது. இவ்வருடம் இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றார். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பின்ர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,உயர் அதிகாரிகள், அரசு விருந்தினர்கள் என பலரும் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 15.08.2018
மஜகவின் சுதந்திர தின வாழ்த்துக்கள்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) நம் இந்திய திருநாடு 72 வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்வது நம்மையெல்லாம் உற்சாகத்தில் ஆழ்த்துகிறது. எத்தனையோ தடைகளையும், சோதனையான பல நிகழ்வுகளையும் கடந்து நம் நாடு முன்னேறி வருகிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்களை கொண்ட நாடு என்ற பெருமை, நமது எதிர்காலத்தை ஒளிமயமானதாக வைத்திருக்கிறது. இத்தருணத்தில் நம் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிர் ஈந்த அனைத்து தியாகிகளையும் நெஞ்சில் சுமந்து , நாட்டின் ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் வளர்த்தெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி
சோம்நாத் சாட்டர்ஜி மறைவு..! மஜக இரங்கல்..!!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை.) நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் #சோம்நாத்_சாட்டர்ஜி காலமானர் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்த வீரர். கட்சி அரசியல் பேதங்களால் நாடாளுமன்ற மரபுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என கவனமாக செயல்பட்டார். இந்திய இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களுள் அவர் ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தொழிலாளர்கள், எளிய மக்கள் ஆகியோரின் நலனுக்காக பாடுபட்ட ஒரு அறிவுஜீவி தலைவரை நாடு இழந்திருக்கிறது. அவரை இழந்து வாடும் தோழர்களுக்கும், உறவுகளுக்கும் மஜகவின் சார்பில் எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் இவண்; மு.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 13.08.18