சென்னை. ஜூலை.09., இன்று சட்டபேரவைக்கு சென்னை திருவல்லிக்கேணி- தாயார் சாஹிப் தெருவில் அமைந்துள்ள, #அரசு_முஸ்லிம்_உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பேரவையின் நடவடிக்கைகளை பார்வையிட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) ஏற்பாட்டில் வருகை தந்தனர். அவை நடவடிக்கைகளை பார்வையிட்டப்பிறகு அவர்களை சந்தித்த மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அனைவரிடமும் அவை நடவடிக்கை பற்றி விசாரித்தார். பிறகு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார், ஆசிரியர்களுக்கு பேனாக்களை அன்பளிப்புகளாக வழங்கினார். பிள்ளைகளிடம் "நன்றாக எல்லோரும் படிக்க வேண்டும், கவனத்தை சிதர விடக்கூடாது" என்று அறிவுரை கூறினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை வளாகம்
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை சீர் அமைக்கவேண்டும்…! தமிழக முதல்வரிடம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை…!!
நெல்லை.ஜுலை.06., மேலப்பாளையம் #அர்_ரஹ்மான் டிரஸ்டும், மனிதநேய ஜனநாயக கட்சியும் மேலப்பாளையத்தில் இருக்கக்கூடிய கண்ணிமார் குளத்தை தூர்வாரி, அதனுடைய கரையை பலப்படுத்தி அந்த குளத்தை புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களிடம் முன்பு மனு கொடுக்கப்பட்டது. அதனை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தமிழக பொதுப்பணிதுறைக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்பொழுது நினைவூட்டலாக கடந்த (04.07.2018) அன்று பல்வேறு ஊர்களின் நீர் நிலை பாதுகாப்பு குறித்து, மனு கொடுத்த போது முக்கியமாக மேலப்பாளையம் கண்ணிமார் குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு முதல்வரை சந்தித்து நேரில் கேட்டுக் கொண்டார். மேலப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மேற்கு_மாவட்டம்
நாகைக்கு மருத்துவ கல்லூரி தேவை! நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள், எழுப்பிய தொகுதி கோரிக்கைகள்…!!
(பாகம் - 10 ) தனி தாலுக்கா எனது தொகுதியிலுள்ள "திருமருகலை" தனி தாலூகாவாக அறிவிக்க வேண்டும். இது எனது தொகுதியின் 30 ஆண்டுக்கால கோரிக்கையாகும். மீனவர்கள் படகுகள் நாகப்பட்டினம் மீனவர்களின் படகுகள், இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மத்திய அரசு மூலம் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கடற்கரை மேம்பாடு நாகை - நாகூர் கடற்கரைப் பகுதிகளை சுற்றுலாத் துறைமூலம் மேம்படுத்தித் தர வேண்டும். சுற்றுச் சூழல் புதுவை மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள மேல வாஞ்சூரில் உள்ள மார்க் துறைமுகத்தில் நிலக்கரி, இறக்குமதி செய்யப்படுவதால் தூசுகள் கிளம்பி சுற்றுச் சூழல் மாசு அடைகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதைப்பற்றி நான் ஏற்கனவே இந்த அவையில் பேசிருக்கின்றேன். தமிழக அரசு சுற்றுச் சூழல் அமைச்சகம் மூலம் இந்நிறுவனத்தினிடம் கலெக்டர் வழியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். சிக்கல் கோயில் சிக்கல் சிங்காரவேலர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இந்து சமய அறநிலைத் துறை சார்பில் தங்கும் விடுதி ஒன்றை கட்டித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பசுமை வழி சாலை நாகப்பட்டினம் - சென்னை இடையே விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் 8
கோயில்,பள்ளிவாசல், தேவாலயங்கள் புனரமைக்க அரசு மானியம்! சட்டசபையில் வரவேற்று மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பேச்சு..
(பாகம் - 09) தமிழக அரசு கோயில்,பள்ளிவாசல், தேவாலயங்களை புனரமைக்க பல்வேறு திட்டங்களை வளங்கிருக்கிறது இவ்வற்றையெல்லாம் உள்ளடக்கிய அறிவிப்புகளுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சட்டசபையில் நன்றி தெரிவிட்டு பேசினார் அவரின் உரைக்குப்பின்வருமாறு மாண்புமிகு பேரவைத் மாற்றுத் தலைவர் அவர்களே.... பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மானிய கோரிக்கை விவாதத்தில் பேச வாய்ப்பளித்ததற்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆரோக்கியமான விமர்சனங்கள், நேர்மையான எதிர் கருத்துக்கள், தோழமைக்கு நலம் சேர்க்கும் காரணிகளாகும். உண்மையான நட்பு என்பது மாறுபட்ட கருத்துக்களை எதிரொலிப்பதும், அதை சகித்துக் கொண்டு தீர்த்து வைப்பதும் தான் என்பதை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அந்த அடிப்படையில் இந்த அரசினுடைய பல்வேறு நடவடிக்கைகளை நான் மனமார பாராட்டி இருக்கின்றேன். பல நடவடிக்கைகளை ஆரோக்கியமான முறையில் விமர்சித்து இருக்கின்றேன். அந்த வகையில் நம்முடைய அரசு பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நெகிழி என்னும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கும், பயன்பட்டிருக்கும் தடை விதித்திருக்கும் இந்த அரசின் துணிச்சலான முயற்சியை மனமார பாராட்டுகின்றேன். அதுபோல இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலகமெங்கும் பரவி இருக்கக்கூடிய தமிழர்கள் நடத்தக்கூடிய அமைப்புகளை
முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் இல்லத்திற்கு மஜக பொதுச்செயலாளர் வருகை…!
திருச்சி. ஜூலை.05., #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி MLA அவர்கள் சென்னையில் இருந்து திருச்சி வருகை தந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (#IUML) தேசிய தலைவர் பேராசிரியர் KM.காதர் மொய்தீன் அவர்களின் மனைவி உடல் நலம் குறித்து அவர்கள் இல்லத்திற்கு வருகைதந்து நலம் விசாரித்தார். நேற்று (04.07.2018) மாலை திருச்சி காஜா நகர், காயிதே மில்லத் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த மஜக பொதுச்செயலாளரை, பேராசிரியரின் மகன் ஹபீப் ரஹ்மான் அவர்கள் வரவேற்றார். பின்னர் பேராசிரியர் அவர்களின் மனைவியை சந்தித்து நலம் விசாரித்தார். பொதுச் செயலாளரிடம் உரையாடிய பேராசிரியரின் மனைவி, தாங்கள் என்னை சந்திக்க நேரில் வந்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், சமுதாய மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றும், தமிமுன் அன்சாரியும் எனக்கு ஒரு மகன் போலத்தான் எனக் கூறி உற்சாகமாக உரையாற்றினார். அந்த தாயாரின் வார்த்தைகளை கேட்ட பொதுச்செயலாளர் கண்கலங்கி இறைவன் அருளால் விரைவில் பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்கின்றோம் எனக் கூறி விடைப் பெற்றார். பேராசிரியர் இல்லத்தில் இல்லாததால் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தார் மஜக