கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருடன் மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம் சந்திப்பு…

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவராக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் மருத்துவர் அருண் தம்புராஜ் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” நூலை அளித்தனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் எஸ்.மன்சூர், மாவட்ட பொருளாளர் ஏ.ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் ஓ.ஏ.கே.நூர்முகம்மது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.எஸ்.பாபர் ஒலி, கடலூர் நகர பொருளாளர் ஹாரூன் ரஷீத் ஆகியோர் பங்கேற்றனர்.