ஈரோடு. ஜன.27., ஈரோடு மாவட்ட முஸ்லிம் அசோசியேசன் ஏற்பாடு செய்திருந்த ஷரீஅத் சட்ட பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டத்தில், தோழமை கட்சி நிர்வாகிகளும், பிற சமுதாய அமைப்பு நிர்வாகிகளும், கிறிஸ்தவ பேராயர்களும் கலந்துகொண்டனர். இந்த சிறப்புவாய்ந்த கூட்டத்தில், மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருச்சி வேலுச்சாமி அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர், இதில் உரையாற்றிய வேலுச்சாமி அவர்கள், பல வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்தார், இறுதியாக எழுச்சி உரையாற்றிய M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தற்போது பாஜக காட்டிவரும் பூச்சாண்டிகளை பட்டியலிட்டவர், பாஜக எப்போதெல்லாம் சிக்கலுக்கு உள்ளாகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற விசமத்தனங்களை பரப்பி மக்களை பதட்டத்தில் உள்ளாக்குகிறார்கள். இப்போது ஜி.எஸ்.டி யால் ஏற்பட்ட தோல்வியை மறைக்க முத்தலாக் விசயத்தை கையில் எடுத்துள்ளார்கள் எனவும், முஸ்லிம்கள் இந்த விசயத்தில் உணர்ச்சிக்கு இடமளிக்காமல் அறிவுப்பூர்மாக செயலாற்ற வேண்டும் எனவும் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயலும் பாசிச சக்திகளுக்கு எதிராக நாட்டில் உள்ள மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என உரையாற்றினார்.! தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம் 27-01-18
Month:
கத்தார் QISF ஏற்படு கூட்டத்தில் MKP நிர்வாகிகள் பங்கேற்பு..!
தோஹா.ஜன.27., கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை நிர்வாகிகளுக்கு கடந்த 26.01.2018 அன்று SDPI கட்சியின் கத்தார் மண்டல பிரிவான QISF ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்திருந்தது. அழைப்பை ஏற்று மஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் SDPI கட்சியின் சிறப்பு பேச்சாளராக மாநில செயற்குழு உறுப்பினர் கோவை அபு தாஹிர் அவர்கள் வருகை புரிந்தார்கள். அவரை வரவேற்கும் வகையில் நட்பின் அடிப்படையில் கத்தார் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக மண்டல செயலாளர் உவைஸ், ஒருஙகிணைபபாளர் KST அப்துல் அஜீஸ் , ஆலோசகர் ஹுசைன், மக்கள் தொடர்பு செய்யது கனி, தகவல் தொடர்பு செயலாளர் அப்துல் ரஜ்ஜாக் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அப்துல் அஜிஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்து, எதிர்வரும் 16.02.2018 அன்று கத்தார் மஜக சார்பாக நடக்கவிருக்கும் திருப்புமுனை மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது. தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை. #கத்தார் மண்டலம்.
மஜக பொதுச் செயலாளருடன்… சமூக மக்கள் கட்சி தலைவர் சந்திப்பு !
நாகை. ஜன.24., இன்று நாகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி யின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களை, சமூக மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அம்பி வெங்கடேஷ் அவர்கள் சந்தித்து தன் திருமணத்திற்கு அழைப்பு கொடுத்தார். வேளாளர் சமுதாய மக்களை முன்னிருத்தி, செயல்படும் இக்கட்சி சமீபத்தில் முத்தலாக் விவகாரத்தில் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்திருந்தது . சமூக நீதி, தமிழர் வாழ்வுரிமை ஆகிய களங்களில் மஜகவுடன் இணைந்து செயல்படவும் தயராக இருப்பதாக அம்பி வெங்கடேஷ் தெரிவித்தார். அவரது திருமணத்தில் நிச்சயம் பங்கு கொள்வதாகவும் மஜக பொதுச்செயலாளர் தெரிவித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_தெற்கு_மாவட்டம் 24.01.2018
கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!!
கத்தாரில் தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்கம்..! குவைத் மண்டல MKP நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை..!! கத்தார் MKP நிர்வாகிகள் வரவேற்று உபசரிப்பு..!! தோஹா.ஜன.22., கத்தார் நாட்டில் நடைபெறும் தொழில் முதலீட்டார்கள் கருத்தரங்கம் மற்றும் கத்தார் நாட்டில் தமிழர்களின் தொழில் முன்னேற்றம் போன்ற விசயங்களில் கலந்துகொள்ள குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவை செயலாளர் முத்துகாப்பட்டி. ஹாஜா மைதீன் அவர்கள் வெல்டன் ரியல் புரோமோடர்ஸ் நிறுவனர் முகம்மது கவுஸ் அவர்கள், வேல்டு ஹலால் டெவலப்மெண்ட் சேர்மன் முகம்மது ஜின்னா அவர்கள் ஆகியோர் வருகைதந்தனர். அவர்களுடன் கத்தார் MKP மண்டல செயலாளர் முஹம்மது உவைஸ் , ஒருங்கிணைப்பாளர் KST அப்துல் அஜிஸ், மண்டல ஆலோசகர் கீழக்கரை ஹுசைன் , வர்த்தகர் அணி செயலாளர் ஷேய்க் மொஹிதீன், மக்கள் தொடர்பு செயலாளர் செய்யது கனி ஆகியோர் மரியாதையை நிமித்தமா சந்தித்து கலந்துயுரை யாடினார். இந்த சந்திப்பில் பல்வேறு தொழில் முன்னேற்ற விஷயங்கள் பரிமாறப்பட்டன. பிப்ரவரி 16 இல் கத்தார் MKPயினர் நடத்தும் "திருப்புமுனை மாநாட்டுக்கு'' அழைப்பு விடுக்கப்பட்டு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இறுதியாக MKP நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்த விருந்தில் அனைவரும் கலந்துகொண்டனர். தகவல்: #MKP_ஊடக_பிரிவு #MKP_கத்தார்_மண்டலம்
மஜக விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்..! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விருதுநகர்.ஜன.18., மனிதநேய ஜனநாயகக் கட்சியின் விருதுநகர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று விருதுநகரில் நடைபெற்றது. இக்கூட்டம் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், மாநில ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர் , இணைப் பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் J.S.ரிஃபாய், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி S.செய்யது அலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கன்மணி காதர், மாவட்டப் பொருளாளர் S.பாதுஷா மற்றும் விருதுநகர் மாவட்டத் துணைச் செயலாளர் A. அகமது ராஜா மற்றும் இராஜை கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்த்தின் அனைத்து பகுதிகளிலும் கிளைகளை உருவாக்குவது, பிப்ரவரி 18 அன்று பொதுக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விருதுநகர்_மாவட்டம்