நாகை MLA நேரில் களமிறங்கினார்! நாகூர் வெட்டாறு அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாகவும்,இதனை தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் நாகூர் வணிகர் சங்கமும்,ரோட்டரி கிளபும் நாகை தொகுதி MLA #தமிமுன்_அன்சாரி அவர்களிடம் நேரில் புகார் அளித்தனர். உடனடியாக மணல் கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்றார். கலெக்டரை நேரில் சந்தித்து அங்கு நடைபெற்ற மணல் கொள்ளை சம்பந்தமாக பேசியதுடன்,இனி அங்கு மணல் அள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறினார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இச்சம்பவம் இப்போது தான் முடிவுக்கு வந்திருப்பதாக நாகூர் வணிகர்கள் MLA விடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.இந்த கள ஆய்வின் போது #அதிமுக_மஜக நிர்வாகிகள் உடனிருந்தனர். பதவியேற்றப் பிறகு நாகை தொகுதி MLA தமிமுன் அன்சாரி அவர்களின் முதல் கள ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: மஜக ஊடகப் பிரிவு நாகை
செய்திகள்
அதிகாரிகளுடன் நாகை MLA சந்திப்பு
நாகப்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில்,நாகை சட்டமன்ற உறுப்பினர் M.#தமிமுன்_அன்சாரி அவர்கள் இன்று துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடலை நடத்தினார். தொகுதி மேம்பாடு குறித்தும்,தொகுதிக்கு ஆற்ற வேண்டிய திட்டமிடல்கள் குறித்தும் கருத்துக்களை பறிமாறினார். நேர்மையான முறையில் தான் மக்கள் பணி ஆற்ற வந்திருப்பதை குறிப்பிட்டு,அதற்கு அதிகாரிகள் நல் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முக்கிய அதிகாரிகளின் அலைப்பேசி எண்களை இணைத்து #வாட்ஸஅப் குழுமம் தொடங்கப்படும் என்றும்,அதன் வாயிலாக பணிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நாகப்பட்டினம் நகராட்சியின் சார்பில் 150 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என்றும்,அதை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்புத் திட்டங்களை கேட்டுப் பெற விருப்பதாகவும் தெரிவித்தார். பிறகு மாவட்ட ஆட்சியரை சந்தித்து தொகுதிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார். தகவல்: மஜக ஊடகப் பிரிவு நாகை
சிறைவாசி அபுதாஹிருடன் மஜக மாநில நிர்வாகிகள் சந்திப்பு
நேற்று கோவைக்கு வருகை தந்த மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொதுச்செயலாளார் எம்.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசித் ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறைவாசி அபுதாஹீரை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்கள். அச்சமயம் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர் மற்றும் எம்.ஹெச்.அப்பாஸ் உள்ளிட்ட கோவை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.. தகவல் : மஜக ஊடகபிரிவு
காயல்பட்டிணத்தில் மஜக கொடியேற்றும் நிகழ்ச்சி
மே.26., தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் இன்று காலை 11 மணியளவில் காயல்பட்டிணம் பேருந்து நிலையம் அருகில் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் மஜகவின் கொடியை ஏற்றி வைத்தார்கள் . இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் #S_S_ஹாரூன்_ரசீத் அவர்களும் , மாநில செயலாளர்கள் #N_A_தைமிய்யா அவர்களும் , #நாச்சிகுளம்_தாஜுதீன் அவர்களும் மாவட்ட செயலாளர் ஜாகிர் மாவட்ட துணைச் செயலாளர் ஷாகுல் , காயல் நகர செயலாளர் ஆஸாத் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பொது மக்களும் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மஜகவின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நாகை சட்ட மன்ற உறுப்பினராக பதவியேற்றபின் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது ... - மஜக ஊடகப்பிரிவு
காயல்பட்டிணம் வாவு கல்லூரிக்கு மஜக பொதுச்செயலாளர் வருகை .!
மே.26., இன்று காயல்பட்டிணம் வா வு வஜிஹா மகளிர் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பினை ஏற்று மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அங்கு வருகை தந்தார் . கல்லூரி நிர்வாகியும் , முன்னால் காயல்பட்டிணம் நகர்மன்றத் தலைவருமான செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களும் , நிர்வாக துணைச் செயலாளர் அஹ்மது இஷாக் உள்ளிட்டோரும் வரவேற்றனர் . பொதுச் செயலாளருடன் , பொருளாளர் ஹாரூன் , மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா , நாச்சக்குளம் தாஜுதீன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர் . தேனீர் விருந்துடன் நடைபெற்ற இச்சந்திப்பின் போது சமுதாய அரசியல் குறித்தும் , கல்வி விவகாரங்கள் குறித்தும் உரையாடப்பட்டது . - மஜக ஊடகப்பிரிவு