மே ;03 மனிதநேய ஜனநாயக கட்சியில் மீண்டும் தங்களை S.A.ஹயாத்துத்தீன், S.M.காஜா நிஜாமூத்தின், A.சேக்முஹம்மது, L.சரவணன், S.சுந்தர் உள்ளிட்ட சகோதரர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாளை A.M ஃபாரூக் தலைமையில் கட்சிப் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டனர். இடையில் ஒரு சில இடங்களில் விலகியிருந்த மனித நேய சொந்தங்கள் ஏப்ரல் முதல் மஜகவின் எழுச்சியில் உந்தப்பட்டு மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 04.05.2024.
Author: admin
தென்சென்னை மஜகவில் தொடரும் இணைவுகள்…
மே.03., தென்சென்னை மாவட்டத்தில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் T.முகமது அனிபா அவர்களது தலைமையில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். புதியதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை தலைவர் அவர்கள் வழங்கி வரவேற்றார். புதிதாக இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் மெளலா. நாசர் அவர்கள் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் உடனிருந்தார். சமீப காலமாக பல்வேறு மாவட்டங்களில் மஜகவில் கூட்டம், கூட்டமாக பலரும் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தென்சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த K.ஷாஜகான், A.முகமது உமர், ஜியாவுதீன், H.ஜின்னா ஹசன் அலி, N.கலீல் பாஷா, M.நைனார், முஹம்மது, பாலமுருகன், S.பிரவீன் குமார், M.ஹரி கிருஷ்ணன், K.ஏழுமலை ஆகியோர் கட்சியில் இணைந்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தென்சென்னை_மாவட்டம் 02.05.2024.
நாகூரில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு….
மே,03., தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மனிதநேய ஜனநாயக கட்சி நாகை மாவட்டம் நாகூர் நகரம் சார்பில் நாகூர் கடைத்தெரு தர்கா அலங்கார வாசலில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மஜக மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லா அவர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது கொடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் பாலமுரளி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், நாகூர் நகர செயலாளர் ஷாகுல் ஹமீது, நகர பொருளாளர் முகமது யாசர், நகர இளைஞரணி செயலாளர் செல்லப்பா, நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இஸ்மாயில், மீராஉசேன்,ஜெஹபர் சாதிக், இப்ராஹிம், ஜெஹபர் சாதிக் என்கிற யாசர் மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகை_மாவட்டம். 03.05.2024.
மஜக இல்ல மண விழா கோவையில் மாநிலச்செயலாளர் ஜாபர் மகள் திருமண நிகழ்ச்சி மஜக தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு…
மே.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் கோவை M.H. ஜாபர் அவர்களுடைய மகள் முஃப்லிஹா அவர்களுக்கும் ,மணமகன் அனஸ் முகம்மது அவர்களுக்கும் இன்று கோவையில் திருமணம் என்னும் நிக்காஹ். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, இணைப் பொதுச்செயலாளர் சையது முகம்மது பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதில் கோவை கூட்டமைப்பு தலைவர் இதயத்துல்லா ஹாஜியார், சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் பைசல், திமுக பிரமுகர்கள் தனிக்கை ராஜேந்திரன், கோட்டை அப்பாஸ், S.A.காதர், கோட்டை பதுருதீன், நீண்டகால ஆயுள் சிறைவாசி அன்சாரி உள்ளிட்டோர்களும், கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள் பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகள் என்று பலரும் வருகை தந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் உள்ளிட்ட மஜக-வின் மாநில, மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் திரளாக பங்கேற்றனர். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #கோவை_தெற்கு_மாவட்டம் 02.05.2024.
ராணிப்பேட்டை மஜகவில் தொடரும் எழுச்சிமிகு இணைவுகள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
மே 02., ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு ராணிப்பேட்டை மாவட்டம் செயலாளர் அப்ரார் அவர்கள் தலைமையில் வேலூர் மாவட்ட செயலாளர் எஜாஸ் அவர்கள் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #ராணிப்பேட்டை_மாவட்டம் 02.05.2024.