கடந்த ( 1.12.16 )அன்று சேலத்தில் கொட்டும் மழையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமா நடத்திய இந்நிகழ்ச்சியில் உலமாக்களுடன், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA,பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர், SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, INTJ தலைவர் S.M பாக்கர், தேசிய லீக் பொதுச்செயலாளர் M.G.K நிஜாமுதீன், ஜாக் துணை பொதுச்செயலாளர் முகைதீன் பக்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு சேலம்.
தமிழகம்
தமிழகம்
மஜகவின் மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி நிர்வாகிகள் தேர்வு…
நவ.29., மனிதநேய ஜனநாயக கட்சி மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பகுதி செயலாளர் – K அப்பாஸ் 9840487605 பகுதி பொருலாளர் - N. தமிம் அன்சாரி 97911 11968. பகுதி துணை செயலாளர்கள் – 1. தீன் (9789948046) 2.U.காதர் சேட் (984 1017590) 3.ஜுனைத் (98 40285853) 4. M.அலிப் ராஜா (9840 8458 12) 5. S.m.சீனி முஹம்மது. (8122816431) ஊடகத்துறை செயலாளர்- M.அபூபக்கர் (99413 05601) மருத்துவ அணி செலாளர் Dr.சாதிக் (99413 099526) இளைஞர் அணி செயலாளர் – அசார் (9940164724) வர்த்தக அணி செயலாளர்- M.அப்துல் காதர் (98841133 8 ) மனித உரிமை அணி செயலாளர்- காஜா முஹைதீன் (98402O2614) தொண்டர் அணி செயலாளர்- அசாருதின் (9940352237) தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் – M.யாசர் அரபாத் (9941749983) உலமா அணி செயலாளர் - தமிம் அன்சாரி (9884129710) நிர்வாகிகள் தேர்வுக்குப்பின் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. டிசம்பர் 6 ரயில் நிலையம் முற்றுகை போரட்டத்தை வீரியமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 2. பகுதி உட்பட்ட இடங்களில் அதிக
மனிதநேய ஜனநாயக கட்சியின் கோட்டைப்பட்டினம் கிளை உதயம்…
நவ.28., புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை இன்று துவங்கி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் K.ராவுத்தர் ஷா அவர்கள் தலைமையேற்க்க மாவட்ட துணைச் செயலாளர் ஏ.எம்.ஹாரிஸ் மற்றும் அரசை செய்யது அபுதாகிர், அறந்தாங்கி முபாரக், சேக் ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை செயலாளர் : F.சேக் தாவூத், கிளைப் பொருளாளர் : T.தாஜுதீன், கிளைச் செயலாளர் : J.முஜிபு ரஹ்மான், மருத்துவ அணிச் செயலாளர் : ராஜா முஹம்மது ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மேலும் மஜக தலைமை அறிவித்துள்ள டிசம்பர்-6 புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் தலைமை தபால் நிலையம் முன்பு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக அதிகமானவர்களை அழைத்துச் செல்வதென தீர்மானம் நிறைவேற்றி நிகழ்வு நிறைவுபெற்றது. தகவல் : மஜக ஊடகபிரிவு, புதுக்கோட்டை மாவட்டம்.
நாகூர் நிலக்கரி மாசு பரவல் பிரச்சனை! காரைக்கால் துறைமுக அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் MLA தலைமையில் நேரில் முறையீடு!
நாகூர் எல்லையில் அமைந்திருக்கும் மார்க் தனியார் துறைமுகத்தில் இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகள் பின் பற்றப்படாததால் நிலக்கரி துகல்கள் காற்றில் கலந்து நாகூர், மேலவாஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படிகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நோய்கள் பரவுகிறது. கேடுகள் பெருகுகிறது. இதற்க்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரியிடம் கோரிக்கை வைத்தனர். அதனை தொடந்து இன்று மார்க் துறைமுக பொது மேலாளர் ரெட்டி மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு MLA அழைப்பு கொடுத்தார். அதுபோல் பல்வேறு தொண்டு இயக்கங்கள், அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கும் அழைப்பு கொடுத்து அவர்களது குறைகளை கூற ஏற்பாடு செய்தார். அதனடிப்படையில் சமூக ஆர்வலர்கள் மக்களின் துன்பங்களை விலாவாரியா ரெட்டி அவர்களிடம் விளக்கினர். இதற்க்கு பதிலளித்த ரெட்டி மேல் நிர்வாகத்திடம் இக்குறைகளைக் கூறி 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாகவும், மீண்டும் சந்திப்பதாகவும் கூறினார். இதனை தொடர்ந்து இப்பிரச்னையை கையாள 7 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 28.11.2016
நாகை அருகே பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி: தமிமுன் அன்சாரி MLA நேரில் ஆறுதல்!
நாகப்பட்டினம் பொரவச்சேரி அருகே ஆந்தங்குடியில் இருந்து நாகை நோக்கி வந்த அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் +2 மாணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 34 பேர் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். இறந்த மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறி, பிறகு அங்கு வந்த கலெக்டரிடம் உரிய இழப்பீடு தொகை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.