2019 - 2020-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ( PRIVATE CANDIDATE ) தனித் தேர்வர்களாக எழுத இருந்த மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இவர்களையும் அதே போல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனித் தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத பதிவு செய்துள்ளார்கள். பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர்கள் எந்த பாடத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றார்களோ அதே பாடத்திட்டத்தின் கீழ்தான் தனித்தேர்வர்களான மாணவர்களும் தேர்வு எழுத ஆயத்தமாக இருந்தார்கள். அவர்களும் தங்களது எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு சிறப்பாக படித்திருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அப்படிபட்ட மாணவர்கள் ஐந்து மாத காலமாக தேர்வு தள்ளிப்போனதால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார்கள். தனித்தேர்வர்களாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 11, 12-ஆம் வகுப்பு பள்ளியில் சேர்ந்து படித்த மாணவர்களில் பலர் இன்று பொறியாளர்களாகவும் ( Engineer ) மருத்துவர்களாகவும் ( Doctor ) இருப்பது குறிப்பிடத்தக்கது. அது போல்
இஸ்லாமிய கலாச்சார பேரவை
2ம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் – மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை
மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்.!
சென்னை.ஆகஸ்ட்.10., மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாஹ்கான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மாவட்டம் முழுவதும் சமூக இடைவெளியுடன் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர். A.அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் T. ரவூப் ரஹீம், காஜாமைதீன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் அப்துல் கரீம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மத்தியசென்னை_கிழக்கு 07-08-2020
இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! தமிழக அரசுக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களை நிரப்புவதற்காக, 2019-20 ஆம் ஆண்டிற்காக நடைப்பெற்ற போட்டி தேர்வில் , 4 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் 8538 பணியிடங்களுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தருணத்தில், 2020-21 ஆம் நிதி ஆண்டில், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தி, மேலும் 10 ஆயிரம் புதிய இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது கொரோனா நெருக்கடி காரணமாக இத்தேர்வுகள் நடத்துவதற்கான சூழல் இல்லை. எனவே கடந்தாண்டு அனைத்து சுற்று தேர்வுகளிலும் வெற்றிப் பெற்ற, தகுதி இருந்தும் காலிப் பணியிடங்கள் இல்லாததால் பணியில் சேர இயலாத 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தயார் நிலையில் உள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்து அந்த பணியிடங்களை நிரப்ப ஆணை வழங்கிட , தமிழக அரசை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். கொரோனா நெருக்கடியில், காவலர்களின் பணி சுமை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், இந்த பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படுவதன் மூலம் சட்டம் - ஒழுங்கு தொடர்பான பணிகள்
ஊரடங்கிலும் மனிதநேய சேவை புரிந்த கோவை மஜகவினர்!
கோவை:ஆக.09., கொரோனா நோய் தொற்று நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதை தொடர்ந்து சாலையோரத்தில் உணவின்றி இருப்பவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், நகர் மண்டபம், காந்திபுரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் மாவட்டச் செயலாளர் M.H.அப்பாஸ், அவர்கள் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை M.H.ஜாபர் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ATR. பதுருதீன், சிங்கை சுலைமான், அபுதாஹீர், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மன்சூர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜூதீன், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள் சதாம், சையது, விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் TMK.காஜா, மாவட்ட