மனிதநேய ஜனநாயக கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, R. செல்வகுமார் த/பெ; ரங்கசாமி 7.4 வது பி குறுக்குத்தெரு, ஏகாங்கிபுரம், அயனாவரம், சென்னை-600023 அலைபேசி; 97103 01896 மாவட்ட துணைச் செயலாளராக, K.அல்லா பகஷ் த/பெ; காதர் பாஷா 438,11வது மேற்கு குறுக்குத் தெரு, எம்.கே.பி நகர், வியாசர்பாடி, சென்னை-600039 அலைபேசி; 9710336864 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 24.05.2024.
செய்திகள்
ஈரான் அதிபருக்கு இரங்கல் கூட்டம் மஜக மாநிலத் துணைச் செயலாளர் அரிமா அசாருதீன் பங்கேற்பு..
மே.24., உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைஸி அவர்களது நினைவேந்தல் கூட்டம் ஷியா-சன்னி ஒற்றுமை இயக்கம் சார்பாக நுஸ்ரத் அலி கான் அவர்களது ஏற்பாட்டில் ஆயிரம் விளக்கு பள்ளிவாசலில் நடைப்பெற்றது. ஷியா காஜி குலாம் மெஹதி அவர்களது தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மஜக மாநில துணைச்செயலாளர் அரிமா A.M.அஸாருதீன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைஸி அவர்களது மரணதிற்கு பின்னால் உள்ள சந்தேகங்களுக்கு தீவிர விசாரணை வேண்டும் என்று பேசி மஜக-வின் சார்பில் இரங்கலை வெளிப்படுத்தினார். மேலும் உலக சமாதானத்திற்கும் - அமைதிக்கும் எப்பொழுதும் எமது கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிற்பார் என்றும், பாலஸ்தீன விவகாரத்தில் உரிய வகையில் பல நாடுகள் செயல்படாத நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைஸி அவர்களது துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்காட்டி 'முட்டையிடும் கோழிகளுக்கு மத்தியில் சண்டையிடும் சேவலாக இருந்தார்' என அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை உலகம் முழுக்க பகிரப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழக சட்டமன்ற வளாகத்தில் கண்டனத்தை பதிவு செய்தார் என்றும் மஜக சார்பாக வருடந்தோறும் நடைப்பெறும்
மாலத்தீவில் உதயமானது மனிதநேய கலாச்சாரப் பேரவை தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…
மே.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 3 நாட்கள் நல்லெண்ண பயணமாக மாலத்தீவு வருகை தந்தார். அங்கு தமிழ்நாடு வாழ் சகோதரர்களுடன் நட்புறவு சந்திப்புகளை மேற்கொண்டார். பிறகு மஜக-வின் அயல்நாட்டுப் பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் மாலத்தீவு மண்டல நிர்வாகம் அமைப்பது குறித்து மன்னர் சல்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் பங்கேற்றார். வளர்ந்து வரும் மாலத்தீவின் வளங்களை தமிழ்நாட்டவர்கள் பயன்படுத்தும் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல், பெருகிவரும் வேலைவாய்ப்புகளை தாயக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தல், இங்கு பணிபுரிய வருபவர்களுக்கு உதவுதல், இங்கு இறப்பவர்களின் உடல்களை தாயகத்திற்கு அனுப்பி வைத்தல், இந்திய தூதரகத்துடன் இணைந்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துதல் என பல திட்டமிடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிறைவாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். MKP மாலத்தீவு மண்டல நிர்வாகிகள் : 1) அ. அப்துல் வதூது - மண்டல செயலாளர், (தூத்துக்குடி ஆத்தூர் - +960 7631847) 2) நா. உமர் பாரூக் - அவைத் தலைவர் , (கயத்தார் - தூத்துக்குடி மாவட்டம்) +91 7339495592 3) க. அனஸ் பொருளாளர், (பரங்கிப்பேட்டை +919788436886) 4) மு. அ. ஜி. அபு உமர் அலி, துணைச்செயலாளர் (காயல்பட்டினம் +919994547773) 5) செ.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு….
மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட அவைத் தலைவராக, A.சிராஜூதீன் த/பெ; சாகுல் ஹமீது 1A, பள்ளிவாசல் தெரு, கறம்பக்குடி, புதுக்கோட்டை அலைபேசி; 97889 94281 மாவட்ட துணைச் செயலாளராக, J.ஆசை அப்துல்லா த/பெ; ஜெயினுலாப்தீன் ஆசை ஸ்டுடியோ, கறம்பக்குடி, புதுக்கோட்டை அலைபேசி; 98658 77634 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21.05.2024.
வட சென்னையில் மஜகவில் தொடரும் இணைப்புகள் பெரம்பூர் தொகுதியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்…
மே.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்த்து திரளான இளைஞர்கள் மஜக-வில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இன்று காலை வடசென்னை மேற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட திரளான இளைஞர்கள் அல்லா பகஷ் தலைமையில் மஜக-வில் இணைந்தனர். மாநில துணைச்செயலாளர் அரிமா.A.M.அஸாருதீன் அவர்களது தலைமையில் நடந்த இந்நிகழ்வில் மாநில செயலாளர்கள் நாகை.முபாரக், கலைக்குயில் இப்ராஹீம் ஆகியோர் புதியதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினர். மேலும் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களது அரசியல் செயல்பாடுகள் மற்றும் மஜக-வின் கொள்கைகள் குறித்து புதியதாக இணைந்தவர்களுக்கு மத்தியில் தலைமை நிர்வாகிகள் கருத்துகளை பகிர்ந்து உற்சாகப்படுத்தினர். சமீப காலமாக வட சென்னையில் மஜக-வில் இணைபவர்களின் எண்ணிக்கைகள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், MJTS மாநில துணைச்செயலாளர் மாத்தூர். இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் ரஜாக், மாவட்ட துணைச்செயலாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வடசென்னை_மேற்கு_மாவட்டம் 20.05.2024.