காரைக்கால் மாவட்டத்தில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பாக பொது சிவில் சட்டத்திற்க்கு எதிரான கையேழுத்து போர் முதற்க்கட்டமாக துவங்கியது! கடை வீதிகளிலும்,வீடுவீடாகவும் கையெழுத்து சேகரிக்கப்பட்டது! தகவல் : ஊடகபிரிவு காரைக்கால் மாவட்டம்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மதுரையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்பு! மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டத்தில் முடிவு!
நேற்று (23.10.2016) மதுரை மாநகரில் அனைத்து ஜமாத் கூட்டம் நடைப்பெற்றது. அதில் அனைத்து தரப்பையும் இணைத்து வரும் 7.11.16 அன்று மதுரையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக பொதுச்செயலாளர் M.#தமிமுன்_அன்சாரி_MLA கலந்துக் கொண்டு எழுச்சியுரையாற்றினார். 125 ஜமாத்துக்கள் இணைவதால் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் 25 ஆயிரத்திர்க்கும் அதிகமானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் ஏற்படாகியுள்ள இந்நிகழ்வு பல நகரங்களிலும் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் மதச்சார்பற்ற, அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்: மஜக_ஊடகப் பிரிவு மதுரை மாவட்டம்.
எழுச்சியோடு தொடங்கியது மஜகவின் கையெழுத்து இயக்கம்!
அக்.21., பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரத்துடிக்கும் மத்திய அரசின் போக்குக்கு மனிதநேய ஐனநாயக கட்சி 'கையெழுத்துப் போர்' என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை ஜூம்மா சிறப்புத் தொழுகைக்குப் பிறகு நாகப்பட்டினம் மரைக்காயர் ஜாமியா மஸ்ஜித் வளாகத்தில் நடைப்பெற்றது. மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முதல் கையெழுத்துப் போட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாகை ஐமாத் தலைவர் ஹபிபுல்லா, மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மாவட்ட செயலாளர் ரியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுமார் 45 நிமிடம் நடைப்பெற்ற இந்நிகழ்வில் 1372 பேர் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீடு, வீடாக சென்று மஜக வினர் கையெழுத்துப் போரை முன்னெடுக்க உள்ளனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு.
காவேரி ரயில் மறியல் போராட்டம் சென்னையில் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் தலைமையில் தடையை உடைத்த மஜகவினர்…
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகளின் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் 17, 18 தேதிகளில் நடைபெறும் என அறிவித்திருந்தனர்... தமிழகம் முழுவதும் நடைபெறும் இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் பங்கேற்பர் என அறிவிக்கப் பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமயில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு பீச் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயிலை மறித்தனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டு நூற்றுக்கணக்கான போலீஸார் அரண் போல் நின்று கொடுத்த பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்ற போது சற்று பதட்டமான சூழ்நிலை உருவானது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மண்ணடி ஈத்கா மசூதி அருகிலிருந்து புறப்பட்ட மஜகவினர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது " உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் ஜா தலைமையிலான நிபுணர் குழு அளித்த அறிக்கை தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் ஒருதலைப் பட்சமான அறிக்கையாகவே உள்ளது. பாஜக அரசு அமைத்த
மஜக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில் மறியல்ஆயிரக்கணக்கானோர் கைதாகி விடுதலை…
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்த மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரியும் விவசாய சங்ககங்களின் சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் ரயில் மறியல் போராட்டத்தை ஆதரித்து இன்று தமிழகம் முழுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.. #mjk_rail_roko_cavery_issue தகவல் : மஜக மாநில ஊடகபிரிவு