நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
அமைச்சர் O.பன்னீர்செல்வம் அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு…
நேற்று அமைச்சர் மாண்புமிகு O.பன்னீர்செல்வம் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்து உரையாடினார். அப்போது பொதுசிவில் சட்டம் குறித்து திரு.வைகைசெல்வன் அவர்களின் கருத்துக்கு தனது ஆட்சேபனையை தெரிவித்து இது சிறுபான்மை மக்களிடம் அதிருப்தி ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டினார். அப்போது இது தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்றும், அது அவருடைய கருத்து மட்டுமே கட்சியின் கருத்து அல்ல என்றும், இது குறித்து அவரிடம் கேட்பதாக கூறினார். வழிபாட்டு தளங்களில் கூம்புவடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவது தொடர்பான அணுகுமுறைகள் குறித்து அலைபேசியில் சுட்டிக்காட்டியதையும் பொதுச்செயலாளர் அவர்கள் நினைவூட்டினார். தகவல்: மஜக ஊடகப்பிரிவு
நாகை தொகுதி மீனவர்களுடன் மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் தமிமுன் அன்சாரி MLA
நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த மீனவ சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை செயல்படுத்தும் விதமாக இன்று அவ்வூர் மீனவ சமுதாய தலைவர்களை அழைத்து கொண்டு #மஜக_பொதுச்செயலாளரும் #நாகை_சட்டமன்ற_உறுப்பினருமான #தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் மாண்புமிகு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் #ஜெயக்குமார் அவர்களை சந்தித்தார். நாகூர் பட்டினச்சேரி மீனவ சமுதாய மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமைச்சரிடம் எடுத்து வைக்கப்பட்டது. விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார். நாகூர் பட்டினச்சேரி மீனவ சமுதாய மக்கள் இச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி விவகாரம்! மஜக நடவடிக்கை!
அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை காரணம் கூறி திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பள்ளிவாசல்களில் பலவந்தமாக, அவகாசம் அளிக்காமல், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றுவதாக உலமாக்கள் சார்பில் மஜக பொதுச்செயலளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் புகார் கூறப்பட்டது. இது குறித்து அரசு உயர் தரப்புக்கும், அதிகாரிகளிடமும் பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார்கள். நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். அதே நேரம் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்றவும், புதிய குறைந்த சக்தி ஒலிப்பெருக்கிகளை மாற்றி வைக்கும் வரை சப்தத்தை குறைத்து பயன்படுத்தவும் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை காவல்துறை நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மஜக சார்பில் எடுத்துவைத்த கருத்தை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். தற்போது இப்பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தகவல்: மஜக ஊடகப் பிரிவு.
மூன்று தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி! மஜக வாழ்த்து!
( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., அவர்கள்வெளியிடும் பத்திரிகை அறிக்கை) தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளிலும், அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களிலும் தொடர்ச்சியாக மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் அதிமுக அரசின் நல்லாட்சிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக இவ்வெற்றி அமைந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறையருளால் உடல்நலம் முன்னேறியிருக்கும் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு இவ்வெற்றி கூடுதல் மகிழ்ச்சியை தரும் என்பதில் ஐயமில்லை. மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி M.A.,M.L.A., பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 22/11/2016