மே.06., தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மஜக விருதுநகர் மாவட்டம், வீரசோழன் கிளை சார்பில் இன்று பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்கப்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது மேலும் கொடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய கிளை நிர்வாகம் சார்பாக தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #விருதுநகர்_மாவட்டம் 06.05.2024.
Author: admin
திருவண்ணாமலையில் மஜக சார்பாக பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு…
மே,06., தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக திருவண்ணாமலை நகரம் சார்பில் இன்று lபொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மஜக மாவட்ட செயலாளர் குமார் அவர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது மேலும் கோடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய மஜக நகர நிர்வாகம் சார்பாக தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் மாவட்டதுணை செயலாளர்கள் தமிழன் முஸ்தபா, S.K.செய்யது அலி, திமுக 36 வார்டு நகரமன்ற உறுப்பினர் ஜோதிமணி, நாஸிறுல் முஸ்லிமின் அறக்கட்டளை தலைவர் பாஷா, மாவட்ட பொருளாளர் அமீர்கான், மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இலியாஸ், மன்சூர் கான், நகர செயலாளர் அம்ஜத் கான், பொருளாளர் அப்துல் ரஹ்மான் நகர நிர்வாகிகள் தினகரன், தஸ்தகீர், நூர் அப்ரர், மற்றும் திரளான
கோட்டைபட்டினத்தில் மஜக இல்ல மணவிழா மாநிலத் துணைச்செயலாளர் கோட்டை ஹாரிஸ் தம்பி திருமண நிகழ்வு தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்….
மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் கோட்டை ஹாரிஸ் அவர்களின் தம்பி மணமகன் A.முஹம்மது இமாம்தீன் B.C.A., அவர்களுக்கும், மணமகள் J.அபிலா பானு B.COM., அவர்களுக்கும் திருமணம் என்னும் நிக்காஹ் கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது. அதனை ஒட்டி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கோட்டைப்பட்டினம் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார் . முன்னதாக கோட்டை பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மஜக கொடிகள் நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டு மஜக கிளையின் சார்பில் அனைவருக்கும் வரவேற்பளிக்கப்பட்டது. தலைவர் அவர்களுடன் மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேரா.அப்துல் சலாம், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் அறந்தாங்கி முனைவர்.முபாரக் அலி, மாவட்ட அவைத் தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை செய்யது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாசின், அப்துல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெயினுதின் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #புதுக்கோட்டை_மாவட்டம் 05.05.2024.
இளையான்குடியில் உற்சாகம் மஜக பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்களின் மகன் திருமண விழா தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு….
மே - 05., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மௌலா நாசர் அவர்களின் மகனும் மணமகனும்மான M.இஜாஸ் அகமது M.A., அவர்களுக்கும், மனமகள் PA.ஃபாஸியா B.A., அவர்களுக்கும் இடையே இன்று இளையான்குடியில் திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற்றது. இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, இணை பொதுச் செயலாளர் கேப்டன் சையது முகமது பாரூக், துணைத் தலைவர் மண்ணை செல்லசாமி, மாநிலச் செயலாளர்கள் நாகை முபாரக், வல்லம் அகமது கபீர், கலைக்குயில் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . இத்திருமண விழாவை முன்னிட்டு நகர மஜக-வின் சார்பில் இளையான்குடி முழுக்க 300-க்கும் அதிகமான இடங்களில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக-வினர் ஆங்காங்கே ஏராளமான வரவேற்பு தட்டிகளும் வைத்திருந்தனர் . இத் திருமண விழாவிற்கு வருகை தந்த தலைவருக்கு மாவட்ட மஜக-வின் சார்பில் ஏராளமான வாகனங்களில் அணிவகுப்பு செய்யப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனால் பிரதான வீதியில் நெரிசல் ஏற்பட்டது. பிறகு காவல் துறை வாகனம் முன் சென்று அது சரி செய்யப்பட்டது. மேல பள்ளிவாசலில் திருமணம் முடிந்ததும் இளையான்குடியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும், ஜமாத்
இளையான்குடியில் வணிகர் தின கொண்டாட்டம் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் சார்பாக மோர் பழங்கள் வழங்கல்….
மே-5., வணிகர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வணிகர் அமைப்புகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஜக சார்பு வணிக அமைப்பான மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) சார்பாக MJVS மாநில செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கம்மாங்கரை பகுதியில் தர்பூசணி பழங்கள், மோர் வழங்கப்பட்டது. இதில் மஜக மாநில செயலாளர் நாகை.முபாரக் அவர்கள் பங்கேற்று குளிர்பானங்கள், பழங்களை சாலையோர வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். வாகனங்களை நிறுத்தி அதிலிருந்தவர்களுக்கும் பழங்களும், மோரும் வழங்கப்பட்டதால் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு நகரெங்கும் மஜக கொடிகள் நடப்பட்டு பிரதான வீதிகள் எங்கும் பரபரப்பாக இருந்தது. இன்று MJVS சார்பில் இளையான்குடியில் இப்பணியை முன்னெடுத்ததற்காக தலைவர் மு.தமிமுன் அன்சாரி MJVS நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை கூறினார். MJVS -ன் இன்றைய நிகழ்வுக்கு இளையான்குடி மக்கள் பலத்த வரவேற்பை வழங்கியதை பார்க்க முடிந்தது. அடுத்தடுத்து இது போன்ற நிகழ்ச்சிகளை இங்கு நடத்துங்கள் என்றும் அவர்கள் ஆர்வமுடன் கூறினர். ஒரே நாளில் மஜக மாவட்டச் செயலாளர் சல்லை. ஹாஜா தலைமையில் நகர மஜக-வினர் உற்சாகமாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாநில துணைச்செயலாளர் அரிமா.A.M.அஸாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர்