மே.14., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், நாகை பாரளுமன்ற உறுப்பினருமான தோழர் M. செல்வராஜ் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது இறுதி நிகழ்வு அவரது சொந்த ஊரான சித்தமல்லியில் நடைப்பெற்றது. இதில் மஜக மாநில துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி, துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் நடைப்பெற்ற இரங்கல் கூட்டத்தில் துணைத் தலைவர் மன்னை செல்லச்சாமி இரங்கல் உரையைற்றினார். இதில் திமுக மாநில பொருளாளர் T.R பாலு MP, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, நாகை மாவட்ட அவைத் தலைவர் சதக்கத்துல்லா, நாகை மாவட்ட துணைச் செயலாளர்கள், நாகை பாலமுரளி, ஃபக்ருதீன், திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜான் முகம்மது, நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திருப்பூண்டி ஷாகுல், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
Author: admin
தோழர் செல்வராஜ் MP மரணம் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி இரங்கல்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், தற்போதைய நாகை நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். M.செல்வராஜ் M.P. அவர்கள் மரணித்த செய்தியறிந்து வருந்துகிறோம். நாகை நாடாளுமன்ற தொகுதியில் 1989, 1996, 1998, 2019 ஆகிய வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிப்பெற்று, அத் தொகுதியில் அதிக முறை மக்கள் பிரதிநிதியாக இருந்த சிறப்பு அவருக்குண்டு. விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நலன்களுக்காகவும் குரல் கொடுத்தவர். பொதுவுடைமை தோழர்களுக்கே உரிய எளிமையும், இனிமையும் கொண்டவர். சமீப மாதங்களாக அவர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில், இம்முறை தேர்தலில் வேறு ஒருவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாய்ப்பு வழங்கிருந்தது. தன் சுகவீனத்தையும் பாராது கட்சியின் வெற்றிக்காக உழைத்தார். கடந்த ஏப்ரலில் பொதக்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் கடைசியாக சந்தித்தேன். அப்போது நாகை நாடாளுமன்ற தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினரின் களப்பணிகள் குறித்து உற்சாகமாக பேசினார். ஒரே சமயத்தில் நாகையில் நான் சட்டமன்ற உறுப்பினராகவும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த போது இருவரும் இணைந்து பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஏராளம். குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் தவறாது பங்கேற்பதும், கூட்டணி - அரசியல் பேதங்களை பாராது அரசின் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பணியாற்றுவதும் அவரது அரசியல் பண்புகளாக இருந்தது. மஜக
மலேசிய மணவிழா வீட்டில் தமிழில் பேசி உரையாடுங்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…
மே.11., மலேசியாவில் ஜாஹீர் உசேன் பிஸ்ட்ரோ (அழகன்குளம்) அவர்களின் மகள் - மணமகள் சபினா ரோசன் அவர்களுக்கும், ஹாஜி முகமது ரித்தாவுதீன் (பனைக்குளம்) அவர்களின் மகன் - மணமகன் முபின் அகமது ஆகியோருக்கும் இன்று திருமணம் எனும் நிக்காஹ் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று கோலாலம்பூர் வருகை தந்தார். அப்போது மணமக்களை வாழ்த்தியவர், சமூகத்திற்கான பொது அறிவுகளையும் கூறினார். அந்த உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு: மலேசியாவில் வாழும் நீங்கள் காலத்தின் சவால்களுக்கு ஏற்ப உங்கள் பிள்ளைகளை உருவாக்குங்கள். நவீன கல்வியில் அவர்களை பயிற்றுவியுங்கள். அத்துடன் மார்க்கப் பற்றோடு நமது கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அது போல் தாய்மொழியை மறவாமல் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள். வீட்டில் தமிழில் பேசி உரையாடுங்கள். மார்க்கமும், தாய்மொழியும் நமது அடையாளங்கள். அதை மறந்து விடக்கூடாது. நமது மூதாதையர்கள் இங்கு வந்தப் போது எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இங்கு நீங்கள் இப்போது செழிப்பாக வாழ்வதற்கு அவர்கள் முக்கிய காரணம் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 1990-களுக்கு பிறகு உங்களின் பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. தொழில்கள் வளர்ந்திருக்கிறது. நீங்கள் இப்போது சம்பாதிப்பதை வீணடித்து விடாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.. நாங்கள்
முதல்வருடன் இனிய சந்திப்பு தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் மஜக நிர்வாகிகள் சந்திப்பு அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள் என வாழ்த்து…
மே.9., திராவிட மாடல் அரசின் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான தளபதி. திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். முதல்வரின் இல்லத்தில் நடைபெற்ற உற்சாகமிகு இச்சந்திப்பின்போது, மஜக பொதுச் செயலாளர் மெளலா. நாசர், பொருளாளர் J.S.ரிஃபாயி, இணைப் பொதுச் செயலாளர் கேப்டன் செய்யது முகம்மது ஃபாரூக் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது முதல்வரிடம், டெல்லி செங்கோட்டையுடன் அவர் இருக்கும் வரைகலை செய்யப்பட்ட படத்தை தலைவர் மு.தமிமுன் அன்சாரி கையளித்தார். அப்போது, 'அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப்போகிறீர்கள் என்பதே இப்படத்தின் விளக்கம் ' என தலைவர் மு.தமிமுன் அன்சாரி கூறியதும், முதல்வர் அதை சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டார். அதன் பிறகு அனைவருக்கும் முதல்வர் அவர்கள் தேனீர் அளித்து உபசரித்தார். 20 நிமிடங்கள் நடைப்பெற்ற இச்சந்திப்பு மிகுந்த உற்சாகத்துடன் அமைந்தது குறிப்பிடத்தக்கது. தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 09.05.2024.
கோபாலப்பட்டினம் நைனா முகமது படுகொலை சட்டம் தன் கடமையை செய்யவேண்டும் குடும்பத்தினரை சந்தித்த பின் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்….
மே.7., புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டினத்தில் படுகொலை செய்யப்பட்ட நைனா முகமது குடும்பத்தாரை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடைய குடும்பத்தாருக்கு அரசு நியாயமான இழப்பீடு வழங்க முயற்சி செய்வதாகவும், நைனா முகமது கொலை வழக்கு எவ்வித குறுக்கீடுகளும், திசை திருப்பும் முயற்சிகளுக்கும் இடமளிக்காமல் சட்டம் தன் கடமையை செய்ய மஜக துணை நிற்கும் என்றும் கூறினார். பிறகு அங்கு வருகை தந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்களிடம் பேசியவர் குடும்பத்திற்கு அரசிடம் மனிதாபிமான அடிப்படையில் கருணைத்தொகை பெற்றுத்தர பரிந்துரைக்க வேண்டும் என்றும் இவ்வழக்கு நியாயமான வடிவில் செல்ல ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணை செயலாளர்கள் பேரா. அப்துல் சலாம், கோட்டை ஹாரிஸ், மனிதஉரிமை பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட அவைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்ட பொருளாளர் அரசை சையது அபுதாஹிர், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் ஹமீது, முகமது யாசின், மாவட்ட கலாச்சார பேரவை செயலாளர் நோக்கியா சாகுல், மாவட்ட அலுவல் செயலாளர்