ஏப்ரல்.02., I.N.D.I.A கூட்டணியின் வடசென்னை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் மாநில துணைச்செயலாளர் S.M.நாசர் தலைமையில் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முகமது ஜாபர் சாதிக், மாவட்ட பொருளாளர் நிஜாம் பாய், மாவட்ட துணைச் செயலாளர் காசிம் ஷரீஃப், வெங்கடேசன், MJTS இளங்கோவன் மற்றும் நூற்றுக்கணக்கான மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு அமைச்சருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #வடசென்னை_தொகுதி #MJK_IT_WING 02.04.2024.
தமிழகம்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024… இராமநாதபுரம் தொகுதி வேட்பாளருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு….
ஏப்ரல்.2., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் I.N.D.I.A கூட்டணியின் வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களையும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களையும் மஜக இளைஞர் அணி மாநில செயலாளர் புதுமடம் பைசல் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். இச்சந்திப்பில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய "புயலோடு போராடும் பூக்கள்" எனும் கவிதை நூலை பரிசளித்தனர் இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சையத் இபுராஹிம், மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுல் ஹசன், ஆசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இச்சந்திப்பின் போது இரண்டாம் கட்டமாக இராமநாதபுரத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள், களப்பணிகள், ஒருங்கிணைந்த செயல் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #இராமநாதபுரம்_மாவட்டம் 01.04.2024.
நாடாளுமன்ற தேர்தல் 2024
தாய்வீடு திரும்பல்! அண்ணாநகர் பகுதியில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்….
ஏப்ரல்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர். தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் நிலையாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் மஜக-வின் பக்கம் ஈர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அண்ணாநகர் நாகூர் மைதீன் தலைமையில் திரளான சகோதரர்கள் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். அவருடன் முஹம்மது கனி மற்றும் பலர் மஜகவில் உடன் இணைந்தனர். மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹீம் கட்சியின் கொள்கையை விவரித்து பேசினார். மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தேர்தல் பணிகள், நிர்வாக கட்டமைப்புகள் ஆலோசனைகளை வழங்கினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #மத்தியசென்னை_மேற்கு 01.04.2024.
நாகூரில்… மஜக சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி…
ஏப்ரல்.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் நாகூர் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், நாகை 29 வார்டு நகர மன்ற உறுப்பினர் M. M.ஜென்னத் பேகம், நாகை வட்டார உலமா சபை தலைவர் S.மக்சூது சாஹிப் ஃபைஜி, மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் M.செய்யது அனஸ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் திமுக, விசிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். மேலும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் ரெக்ஸ் சுல்தான், மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத், அவைத்தலைவர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் பாலமுரளி, மாவட்ட அணி நிர்வாகிகள் பிரவீன், அசாருதீன், உமர், இப்ராஹிம், IT சாகுல், மாலிக் மற்றும் நாகூர் நகர நிர்வாகிகள் ஷாகுல் ஹமீது, முகமது யாசர், இஸ்மாயில், முகமது ஷஃபியுல்லா, நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், திருமருகல்