சிறுவாணி நதி நீர் குறித்து கேரளா அரசு மற்றும் மத்திய அரசின் போக்குக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து மஜக பொதுச்செயளாலர் M_தமிமுன் அன்சாரி MLA 2_09_16_அன்று சட்டமன்றத்தி ஆற்றிய உரை. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே: இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் காவிரி நதியின் உப நதியான சிறுவாணி நதி நீரில் கேரள அரசின் சூழ்ச்சியினை வேரறுக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலை நாட்டும் வகையிலும் இந்த மாமன்றத்திலே கொண்டு வந்திருக்கும் சிறப்பான தீர்மானத்தை வழிமொழிகிறேன். உலகின் பிரம்மாண்டமான நதிகளில் பிரம்மபுத்திரா ஒன்று. பிரம்மபுத்திரா திபெத்தில் உருவாகி, சீனாவை கடந்து இந்தியாவில் நுழைந்து பங்களாதேஷ் வழியாக வங்க கடலில் கலக்கிறது. நமது நாட்டில் ரஷ்யாவுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகனைகளில் பிரமோஸ் ஏவுகனையும் ஒன்று. அந்த கூட்டுத்தயாரிப்புக்கு பெயரை எவ்வாறு வைக்கலாம் ?என்று அப்துல் கலாம் யோசித்தார். ரஷ்யாவில் மாஸ்கோ நதி நீர் ஓடுகிறது. பிரம்மபுத்திரா நதியின் பெயரில் ஒரு பகுதியையும், மாஸ்கோ நதியின் பெயரில் ஒரு பகுதியையும் இணைத்து 'பிரமோஸ்' என்று பெயர் வைத்தார். அந்த அளவுக்கு நாம் நேசிக்கும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பன்னாட்டு விதிகளை மீறி சீனா அணைகளை கட்டி
தமிழகம்
தமிழகம்
மஜகவின் நெல்லை மேற்க்கு மாவட்டம், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம்
நாமக்கல் மாவட்ட மஜக நிர்வாகிகள் நியமனம்…
மாவட்ட செயலாளர்: B.சையத் அகமத் கபீர் த/பெ.சையத் பஷீர் 45/15,மஸ்ஜித் தெரு நாமக்கல் Pin:637001 தொடர்புக்கு:99 52 42 65 56 மாவட்ட பொருளாளர்: N.ஷேக் நிஜாம் த/பெ.நவாப் ஜான் 43,மஸ்ஜித் தெரு நாமக்கல் Pin:637001 தொடர்புக்கு: 90 80 55 32 31 மாவட்ட துணை செயலாளர்கள். M.முஸ்தபா, த/பெ,முஹம்மது யாக்கூப், 102/50.மாரியம்மன் கோவில் தெரு, சேந்தமங்களம். Pin637409. நாமக்கல் மாவட்டம். தொடர்புக்கு:99 76 14 75 52 T.லுக்மான், த/பெ,தாஜுதீன், 6/385,மேற்கு தெரு, கொக்கராயன் பேட்டை, Pin:638007. குமாரபளையம் தாலுக்கா, நாமக்கல் மாவட்டம். மேற்கன்டவர்கள் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் அணைவரும் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறீகள். இவன் M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி.
மஜகவின் மதுரை வடக்கு மேலூர் நகர் ஆலோசனைக் கூட்டம்…
ஆக.26., மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டத்தின் மேலூர் நகர் அலுவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா, மாவட்ட துணைச்செயலாளர் ஒத்தக்கடை பாரூக், ஒன்றிய செயலாளர் சுலைமான், மேலூர் நகர் செயலாளர் காஜாமைதீன், மேலூர் ஒன்றிய செயலாளர் சின்னமீரான் அகியோர் கலந்து கொண்டனர். மஜக மேலூர் நகர் உட்பட்ட பகுதியில் புதிய கிளை உருவாக்க பற்றி ஆலோசனை செயபட்டது. இன்ஷஅல்லாஹ விரைவில் புதிய கிளைகள் துவங்கப்படும் என்று முடிவு செயப்பட்டது. தகவல் : மஜக ஊடகபிரிவு மதுரை
விண்மீன்களா! வஞ்சிரமீன்களா! சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் உரை.
ஆக,25.,நேற்று 24-8-2016 சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலவர் அவர்கள் 110 விதியின் கீழ் மீன்வளத்துறை மற்றும் இளைஞர் விளையாட்டு நலன் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA பேசினார். தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீட்டர் நீளம் முழுதும், 608 மீனவ கிராமங்களில் வாழும், மீனவ மக்கள் மனம் குளிரும் வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன. 2016-17 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மீன்வள மேம்பாட்டிற்கான தொகையை 743.79 கோடியாக உயர்த்தி சாதனை அறிவிப்பினை வெளியிட்டார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள், மீன்பிடி இறங்குத் தளங்கள், மீன்பிடி துறைமுகங்கள், தூண்டில் வலைகள், மீன் பதப்படுத்தும் கிடங்குகள், என அறிவிப்பு செய்து அதனை நடைமுறைப்படுத்தி மீனவர்களின் இதயங்களை வென்று இருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பாடலில் ஒரு கவிதை உண்டு, "தண்ணீரில் மீன் அழுதால், கண்ணீரைத்தான் யார் அறிவார்" என்று எழுதி இருப்பார். அதை போல மீனவர்களின் துயரங்களை அறிந்து அதை போக்கும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறார்கள். "அவர்களது அறிவிப்புகள் எட்டிப்பிடிக்க முடியாத விண்மீன்கள் அல்ல.. எல்லோருக்கும் கிடைக்கும் வஞ்சிர மீன்கள்.." இவ்வாறு தமிமுன் அன்சாரி MLA பேசியதும் முதலவர் உட்பட அனைவரும் மேஜையை தட்டி ரசித்தனர்.