மே.20., மஜக அயலகப் பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) ஐக்கிய அரபு அமீரக மண்டலம், அல் அய்ன் மாநகர மாதாந்திர செயற்குழு கூட்டம் 18.05.2024 அன்று மாலை அல் அய்ன் மாநகர துணைச் செயலாளர் G.ஜெயமோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அமீரக மூத்த ஆலோசகர் J.ஷேக் தாவூது அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாநகரில் சிறப்பாகச் செயல்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டுகளும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது மேலும் வரும் மாதங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது., இக்கூட்டத்தில் அமீரக துணைச் செயலாளர் M.அப்துல் நாசர், மற்றும் அல் அய்ன் மாநகர நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்., மேலும் நிகழ்வின் இறுதியில் அல் அய்ன் மாநகர பொருளாளர் N.M.பஜ்லுல் ஹக் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே நிறைவுற்றது., தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MKPitWING #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #அல்_அய்ன்_மாநகரம் #ஐக்கிய_அமீரகம். 18.05.2024.
Author: admin
இரங்கல் அறிக்கை ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி விபத்தில் மரணம் முட்டையிடும் கோழிகளுக்கு மத்தியில் கீறிகளுக்கு எதிராக சண்டையிடும் சேவலாக இருந்தவர் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை…
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி அவர்களும், அவருடன் பயணித்தவர்களும் நேற்று மாலை ஈரான் - அஜர்பைஜான் எல்லையருகில் நடந்த உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) விபத்தில் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வேதனையையும், அதிர்ச்சியையும் தருகிறது. ஈரானின் உச்ச நீதிமன்ற நீதிபதி, சிறந்த அறிஞர், அரசியல் வல்லுநர் என்பது போன்ற பல சிறப்புகளுடன் ஈரானின் எட்டாவது அதிபராக கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றப் போது ஆசியாவே மகிழ்ந்தது. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஈரானின் மீது ஒரு தலைபட்சமாக பொருளாதார தடை விதித்து; அந்நாட்டு மக்களை பெரும் வாழ்வியல் நெருக்கடியில் ஆழ்த்திய போதும்; நிலைகுலையாத நம்பிக்கையோடு அவர்களை இப்ராகிம் ரைசி உற்சாகமாக வழிநடத்தினார். மத்திய கிழக்கின் அரசியல் சமநிலையில் ஈரானின் பங்களிப்பை வலிமையாக உறுதி செய்தார். கடந்தாண்டு பாலஸ்தீனத்தின் - காஸாவின் மீது இஸ்ரேல் தொடங்கிய பயங்கரவாத போருக்கு எதிராக அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. அதுவே உலகின் கவனத்தை ஈரானை சுற்றியே வட்டமிட வைத்தது. நான் முட்டையிடும் கோழி அல்ல; கீறிகளுக்கு எதிராக சண்டையிடும் சேவல் என்பதை நிருபித்து, ஈரானின் ராணுவ மேலாண்மையை நிலைநிறுத்திய அவரது துணிச்சல் வெற்றிகரமாக நோக்கப்பட்டது. நட்பு நாடுகளிடம் அமைதிப் புறாவாகவும்; பகை வல்லரசுகளிடம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன துண்டணிந்த உணர்வாளர்கள் மஜக மாநிலச் செயலாளர் முபாரக் பங்கேற்பு….
மே.19., கடந்த 2009 அன்று இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். அப்போர் மே-17 அன்று முடிவுற்றது. இதை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் இந்த வாரத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மே 17 இயக்கம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநில செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டார். மேலும் மதிமுக தலைவர் வைகோ MP, அற்புதம்மாள், விசிக வன்னியரசு, குடந்தை அரசன், INTJ முனீர் ஆகியோர் கலந்து கொண்டனர். உணர்வுபூர்வமாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீனத்தின் அடையாளமாக திகழ்ந்த யாசர் அராபத் அவர்கள் அணியும் துண்டை சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் அணிந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஸா மற்றும் ஈழத்துக்காக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக இக்களம் அமைந்தது. இந்நிகழ்வில் மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர்
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மத்திய மாவட்ட நிர்வாகிகளாக, மாவட்ட துணைச் செயலாளராக, சேக் தாவுது த/பெ; இக்பால் ராஜா வாணக்கரா ஆதம் நகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, அய்யம்பேட்டை. அலைபேசி; 9566772753 மாவட்ட இளைஞரணி செயலாளராக, தர்ஷன் குமார் த/பெ; சுப்ரமணியன் வடக்கு தெரு, வாண்டையார் இருப்பு, தஞ்சாவூர் அலைபேசி; 9003571680 ஆகியோர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார்கள், மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18.05.2024.
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக, T. முகமத் ஹனிபா 3/89 P. K. S. கார்டன், E. V. R பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 600041 அலைபேசி; 9092764786 தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; மெளலா. நாசர் பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 18.05.2024.