முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன துண்டணிந்த உணர்வாளர்கள் மஜக மாநிலச் செயலாளர் முபாரக் பங்கேற்பு….

மே.19.,

கடந்த 2009 அன்று இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் ஈழத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்காணோர் கொல்லப்பட்டனர். அப்போர் மே-17 அன்று முடிவுற்றது.

இதை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் இந்த வாரத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டு மே 17 இயக்கம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநில செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டார்.

மேலும் மதிமுக தலைவர் வைகோ MP, அற்புதம்மாள், விசிக வன்னியரசு, குடந்தை அரசன், INTJ முனீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உணர்வுபூர்வமாக நடைப்பெற்ற இந்நிகழ்வில் காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாலஸ்தீனத்தின் அடையாளமாக திகழ்ந்த யாசர் அராபத் அவர்கள் அணியும் துண்டை சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் அணிந்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸா மற்றும் ஈழத்துக்காக தமிழர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக இக்களம் அமைந்தது.

இந்நிகழ்வில் மாணவர் இந்தியா தலைவர் புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான் கான், தென் சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் நாகூரான், பகுதி நிர்வாகிகள் ஏழுமலை, ஹரி, விக்கி உள்ளிட்ட திரளான மஜக-வினரும் பங்கேற்றனர்.

தகவல் :

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்சென்னை_கிழக்கு_மாவட்டம்
19.05.2024.