டிச.12., கடந்த 11.12.2016 அன்று காஞ்சி தெற்கு மாவட்டம் தேவநேரி (மகாபலிபுரம்) கிராம மீனவ இளைஞர்கள் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது முன்னிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் மாநிலச் செயலாளர் சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் யூசுப், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரஹ்மதுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் கிழக்கு மாவட்டம், திருவெற்றியூர் பகுதி 1 வது வட்டச் செயலாளர் இப்றாகீம் மற்றும் மீனவரணிச் செயலாளர் யுவராஜ் முயற்சியில் இந்த இணைப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.