மே.13., மதுரை கிடாரிபட்டி பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற நபர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார். அதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கோரிக்கையை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முபாரக், அவர்கள் தலைமையில் அவரது உடலை பெற்று சுகாரத்துறை அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறையின்படி நல்லடக்கம் செய்தனர். இப்பணியில் வடக்கு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் கனி, மாவட்ட துனை செயலாளர் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சையது அலி, மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #மதுரை_வடக்கு_மாவட்டம் 12.05.2021
Tag: கொரோனாவைரஸ்
காட்டுமன்னார்கோயில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு!
மே-3, காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி பருகினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் O.R. ஜாகிர் ஹுசைன் கலந்து கொண்டார் விநியோகத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ரிபாயத்துல்லாஹ், பொருளாளர் பகத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
மஜக பொள்ளாச்சி நகரம் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் பலர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் கட்சியில் பணியாற்றக்கூடிய ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு ரூ.2150 மதிப்புள்ள ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சுமார் 50பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜாஜெமீசா, நகர பொருளாளர் முகமது பஷீர், நகர துணைச் செயலாளர் அன்சர், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், பொருளாளர் இஸ்மாயில், துணைச் செயலாளர்கள் சௌகத், அபிப் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 24.04.2020
கொரோனா சிகிச்சை நிலவரம்! அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு..!
ஏப்ரல்.25., இன்று சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு. திரு. விஜயபாஸ்கர் அவர்களுடன் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் அலைபேசியில் உரையாடினார். தற்போது அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொடர்பில் கிசிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் நலம் குறித்து விசாரித்தார். முதலில் "பாசிட்டிவ்" ஆனவர்கள், 14 நாட்களுக்கு பிறகு அடுத்தடுத்து "நெகட்டிவ்" ரிசல்டை பெற்றால், அதிகபட்சமாக 28 நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும், அவர்கள் வீட்டில் அடுத்த இரு வாரங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் விளக்கினார். தற்போது உரிய கிசிச்சை காரணமாக விரைவாக பலர் குணமடைந்து வருவதாகவும், சதவீத அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த முன்னேற்றம் என்றும் கூறினார். ஒவ்வொருவரின் நலன் கருதி மிகுந்த ஈடுபாட்டோடு கிசிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். அவருக்கு பாராட்டுகளை தெரிவித்த பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், முழுமையாக கிசிச்சைப் பெற்றவர்கள் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே உறவினர்களின் விருப்பம் என்பதை சுட்டிக்காட்டினார். அதை கவனத்தில் கொண்டு தமிழகம் முழுக்க கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 25-04-2020
காவல்துறையினருக்கு நோய்எதிர்ப்பை அதிகரிக்கும் மூலிகை தொகுப்பு : சஞ்சீவிபார்மா உடன் இணைந்து நெல்லை மாநகர் மஜகவினர் வழங்கினர்!
ஏப்ரல்.24., நெல்லை மாநகர் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சஞ்சீவி பார்மா இணைந்து ஊரடங்கிலும் தொடர்ந்து பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மூலிகை மருந்துகளான கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் சூரணப்பொடிகள் மற்றும் ஆடாதோடா, மனப்பாகு உள்ளிட்ட சஞ்சீவியின் மூலிகை தொகுப்புகளை நெல்லை மாநகர துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்களிடம் 400 காவலர்களுக்கு வழங்கும் வகையில் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மஜக-வின் மாநகர செயலாளர் நெல்லை நிஜாம், பொருளாளர் பேட்டை மூஸா, துணைச் செயலாளர்கள் பீர்முஹம்மது, அலாவுதீன் மற்றும் நெல்லை பகுதி செயலாளர் கலீல் உள்ளிட்டோர் செய்தனர். தொடர்ந்து சஞ்சீவி பார்மாவின் தென்மண்டல மேலாளர் A. குல்முஹம்மது அவர்கள் கலந்துக் கொண்டு மருந்தின் நன்மைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகரச் செயலாளர் நெல்லை நிஜாம் அவர்கள் கூறும்போது... மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களின் ஆலோசனையின் பேரில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அடுத்தக்கட்டமாக மாவட்டம் முழுவதும் விநியோகம் செய்வதற்கானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது என்று தெரிவித்தார். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாநகர் 24-04-2020