முகப்பு


டிச.06., தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் உடலுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, பொருளாளர் SS.ஹாரூன் ரஷீத், மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா, சாதிக் பாஷா, மாநில துணைச்  செயலாளர் புதுமடம்.அனீஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர். லட்சக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். தகவல் : மஜக ஊடகபிரிவு
மதுரையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து பேட்டி எடுத்தனர். அப்போது தான் நேராக அப்போலோ மருத்துவமனை செல்வதாகவும், முதல்வர் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார். அத்துடன்  முதல்வரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு  மஜக சார்பில் நடத்தவிருந்த  டிசம்பர்6 போராட்டங்கள்  ரத்து செய்யப்பட்டிருப்பதையும் கூறினார் தகவல்; மஜக_ஊடகப் பிரிவு (சென்னை)
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக ஊடகங்கள் வழியாக அறிந்து மிகுந்த வேதனையுற்றோம். அம்மா அவர்கள் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். அனைத்து நல் உள்ளங்களும் அவர் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 04_12_16
நேற்று (02.12.16 ) நாகப்பட்டினம் தொகுதியில்  M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொகுதி முழுக்க சுற்றுப்பயணம் செய்து, கள ஆய்வுகளை நடத்தினார். நாகை நகர முக்கிய பகுதிகளில் சாக்கடை அடைப்புகள், மழை நீர் தேக்கங்களை கண்டறிந்து அதிகாரிகளை அழைத்து பேசினார். மீனவ மக்கள் வசிக்கும் புதிய நம்பியார் நகருக்கு அதிகாரிகளுடன் வந்து மக்கள் குறைக் கேட்டார். அங்குள்ள மழை நீரை வெளியேற்ற உத்தரவிட்டார். பிறகு பொரவச்சேரி மற்றும் நாகூருக்கு வருகை தந்தார். மாலை திட்டச்சேரி மற்றும் திருமருகலுக்கு வருகை தந்தார். மக்கள் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளை தொடர்புக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மழை
​கடந்த ( 1.12.16 )அன்று சேலத்தில் கொட்டும் மழையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமா நடத்திய இந்நிகழ்ச்சியில் உலமாக்களுடன், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA,பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர், SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, INTJ தலைவர் S.M பாக்கர், தேசிய லீக் பொதுச்செயலாளர் M.G.K நிஜாமுதீன், ஜாக் துணை பொதுச்செயலாளர் முகைதீன் பக்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு சேலம்.​ ​ ​

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.