75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் நகரம் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் செய்யது இப்ராஹிம், அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜமாத் கமிட்டி செயலாளர் நைனார் முஹம்மது, மஜக மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் சங்கை பீர் மைதீன், நகர பொருளாளர் முகம்மது இஸ்மாயில், நகரத் துணைச் செயலாளர் ஷேக் முகம்மது, காவேரி நகர் கிளை பொறுப்பாளர் தர்வீஸ் மைதீன், முகமது ரபிக், திவான் மைதீன் மற்றும் நிர்வாகிகள், பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தென்காசி_மாவட்டம் 15.08.2021
Tag: 75வது சுதந்திர தினம்
காயல்பட்டினத்தில் 75வது சுதந்திர தின விழா!
மஜக சார்பில் தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வினியோகம்! மாநில துணை செயலாளர் சாகுல் அமீது பங்கேற்பு! நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி புறநகர் மாவட்டம் சார்பில் காயல்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப், தலைமை தாங்கினார் மாவட்ட துணை செயலாளர் மீராசாஹிப், முன்னிலை வகித்தார், மாவட்ட பொருளாளர் குருகை.ராசுக்குட்டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல் ஹமீது அவர்கள் மரக்கன்றுகள் விநியோகத்தை துவக்கி வைத்தார். காயல்பட்டினம் நகர செயலாளர் இப்னு மாஜா, நன்றியுரை யாற்றினார் இந்த நிகழ்வில் காயல்பட்டினம் நகர பொருளாளர் மீரான், நகர நிர்வாகிகள் ஜியாவுதீன்,சம்சுக்கனி, இர்ஷாத், பக்கீர், சித்திக், இஸ்மாயில், உள்ளிட்ட மஜகவினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம் 15-08-2021
அதிரையில் மஜக ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் அதிராம்பட்டினம் MJTS ஆட்டோ நிறுத்தத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் அதிரை மஜக நகர செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மஜக நகர நிர்வாகிகள் மற்றும் MJTS ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்.
75வது சுதந்திர தின விழா! விருது நகரில் மஜக சார்பில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
இந்திய தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ராஜா, ராஜபாளையம் நகர செயலாளர் சம்சுதீன், மற்றும் மாவட்ட ஒன்றிய, பகுதி, கழக, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #விருதுநகர்_மாவட்டம் 15.08.2021
காட்டுமன்னார்கோயிலில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காட்டுமன்னார்கோயில், ரம்ஜான் தைக்காலில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தேசிய கொடிகளுடன் முக கவசங்கள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன், கிளை செயலாளர் ரிபாயத்துல்லா, கிளை நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.