முகப்பு


சென்னை.மே.05., காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி ஜெசிந்தா, நேற்று மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கட்டிருந்தது. இன்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி அவர்கள் நேரில் சென்று பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது காங்கிரஸ் MLA ராஜேஷ், கிறித்தவ நல்லெண்ண இயக்கம் இனிக்கோ இருதயராஜ் MLA., உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021
சென்னை.மே.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் MLA., அவர்கள் இன்று வருகை தந்து. பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார். அப்போது பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் உடனிருந்தனர். தனது வெற்றிக்கு மஜக-வினர் தீவிரமாக களப்பணியாற்றிதை குறிப்பிட்டு, அவர்களது உழைப்பு மறக்க முடியாதது என்றார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 05.05.2021
மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர்! சென்னை:மே.05., திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், இணைப் பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சந்தித்தனர். அப்போது பொதுச்செயலாளர் அவர்கள் பேராசிரியர் கே.எஸ்.ராமகிருஷ்ணராவ் எழுதிய முகமது நபி (ஸல்) என்ற நூலையும், ஆசிரியர் கி.வீரமணி எழுதிய பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் என்ற நூலையும் அவருக்கு பரிசளித்து வாழ்த்து கூறினார். பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர்
மே-3, காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி பருகினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் O.R. ஜாகிர் ஹுசைன் கலந்து கொண்டார் விநியோகத்தை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நகர செயலாளர் ரிபாயத்துல்லாஹ், பொருளாளர் பகத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிக்கை! தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் பரிசளித்து இருக்கிறார்கள். 234 இடங்களில் 163 இடங்களை இக்கூட்டணிக்கு வழங்கி தெளிவான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் வடக்கத்திய அரசியல் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, பாஜகவோடு யார் கூட்டணி வைத்தாலும் ஆட்சி அதிகாரத்தின் நிழலைக் கூட நெருங்க முடியாது என்ற செய்தியை தமிழகம் உணர்த்தியிருக்கிறது. மாபெரும் இந்த வெற்றிக்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான களப்பணிகளின் மூலம் அயராது உழைத்த திமுக தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் உழைப்பு அளவிட முடியாதது. தன் இளமைக் காலம் முதல்,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*