(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளியிடும் அறிக்கை..) டெல்லி உயர் நீதிமன்ற முனனாள் தலைமை #நீதிபதி #ராஜேந்தர்_சிங்_சச்சார் (94) முதுமை காரணமாக டெல்லியில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் நேர்மையின் அடையாளமாய், நீதியின் சிகரமாய் தனது பணிக்காலத்தில் வாழ்ந்து சென்றார். அவரது தீர்ப்புகள் யாவும் மனிதாபிமானத்தின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன. ஓய்வு பெற்ற பிறகு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக குடிமக்கள் சுதந்திரத்திற்கான சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பின்தங்கிய மக்களுக்காக குரல் கொடுத்தார். அதனடிப்படையிலேயே இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மூலம் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக ராஜேந்திர சிங் சச்சார் இருந்தார். இந்திய முஸ்லிம்களின் வாழ்நிலை, தலித்துகளின் நிலையைவிட மோசமாக இருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின் ஆதார தகவல்கள் நாட்டையே உலுக்கியது. அந்த அறிக்கை நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு அதன் பல அம்சங்கள் பல மாநிலங்களில் அமலுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த 2013 ஆம் ஆண்டு அவரை டெல்லியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது பத்திரிக்கையாளர் அத்தேஸ் அவர்களும் உடனிருந்தார். சச்சார் கமிட்டி ஆய்வுக்காக
Tag: மஜக
ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு குடந்தையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!
குடந்தை ஏப்.21., காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஷிஃபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று 20/04/2018 மாலை 6.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை , நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மாநில செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று கண்டன கோஷங்கங்களை முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை வடக்கு 20.04.2018
ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு அந்தியூரில் மஜக ஆர்ப்பாட்டம்!
ஈரோடு.ஏப்.20., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுதும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக #ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் மஜக தலைமையில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது. பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்திய படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர். ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் செய்யது அஹ்மத் பாரூக்,மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் கோவை பாரூக், நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி
சிறையில் சந்திப்பு…!
இன்று புழல் சிறையில் இரண்டாவது முறையாக #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது உள்ளிட்ட 7 மஜக சகோதரர்களையும் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சந்தித்தார். அவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோரும் உடன் சென்றனர். வழக்கு நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், மூவரும் எடுத்து கூறினர். அதற்கு அவர்கள் தலைமை எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை புரிந்து கொள்வதாகவும், யாரோ சிலர் சொல்லும் அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும், தாங்கள் இவ்விசயத்தில் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
நாகரீக அரசியலுக்கு உகந்ததல்ல…
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) திமுக தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து மறைமுகமாக ட்விட்டரில் பாஜகவின் தேசிய செயலாளர் H. ராஜா வெளியிட்ட கருத்து அநாகரீகத்தின் உச்சமாகும். கலைஞர் உடல் நலமின்றி, அரசியலிருந்து ஏறத்தாழ ஒதுங்கியிருக்கும் நிலையில் அவர் மீது தொடுத்திருக்கும் தனி நபர் தாக்குதல்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாகும். அக்கருத்துகளை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நாகரீக வளர்ச்சியின் வழியாகவே, அரசியல் முதிர்ச்சியும், பண்பாடும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனிநபர் விமர்சனங்களும், தனி நபரை வீழ்த்த முன்னெடுக்கப்படும் தரங்கெட்ட முயற்சிகளும் பொது வாழ்வுக்கு எந்த விதத்திலும் சிறப்பு சேர்க்காது. கொள்கை ரீதியான விமர்சனங்கள் மட்டுமே, ஒருவரின் அரசியல் தரத்தை மதிப்பீடு செய்யும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இவண், #மு_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 19.04.18