திருப்பூரில் பள்ளிவாசல் பிரச்சினை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றது மஜக

திருப்பூரில் 15 வேலம்பாளையம் என்ற பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பூட்ட வேண்டும் என்று RDO சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது.வெள்ளிக்கிழமை ஜூலை 29 ,மதியம் 3 மணிக்குப் பிறகு அது செயல்படக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது.

பள்ளிவாசல் பதிவு அங்கீகாரம் சட்டப்படி இல்லை என்று, அப்பகுதி குடியிருப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளதாக ,ஆதாரங்களின் அடிப்படையில் RDO கூறியிருக்கிறார்.

இதனை நேற்று சட்டசபைக்கு வந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம்,பள்ளிவாசல் முத்தவல்லி சேக் அமீர் தலைமையிலான குழு (9786125454) கூறியது.

உடனே முதல்வர் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினையை மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அனுப்பி வைத்தார். நீதிமன்ற உத்தரவு என்றாலும் இது உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினை என்பதால், நடவடிக்கையை கைவிடுமாறு,பதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இருபுறமும் உள்ள சிலர் இதை கவனமாக அனுகாமல்,உணர்வுகளை தூண்டும் வகையில் நடப்பதாக அதிகாரிகள் வருத்தப்பட்டனர்.

சில முஸ்லிம் அமைப்புகள் நீதிமன்ற உத்தரவை, ஏதோ அரசு செய்வதுப் போல சித்தரித்து கருத்துக்களை பரப்புவது என்ன நியாயம்? என்றனர்.

இதற்கு விளக்கமளித்த மஜக பொதுச்செயலாளர், முஸ்லிம்கள் தரப்பில் அப்பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகம் மிகுந்த பொறுப்புணர்வோடு சட்டப்படி அணுகுவதாகவும்,சில அமைப்புகள் சார்பில் வெளியிடும் கடுமையான கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.

பிறகு இப்பிரச்சினை முதல்வர் அலுவலகத்திலிருந்து திருப்பூரை சேர்ந்த வீட்டு வசதித்துறை அமைச்சர் உளவுத்துறை, காவல்துறை, மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் கொண்டு செல்லப்பட்டு, ஜமாத் சார்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிவாசலுக்கு பூட்டுப்போடும் நடவடிக்கை ஜமாத்தின் பதில் சட்ட நடவடிக்கைக்கு வாய்ப்பளிக்கும் வகையில் கைவிடப்பட்டிருக்கிறது.

மஜக எடுத்த நிதானமாக அணுகுமுறைகள் மூலம் பதட்டம் தணிக்கப்பட்டிருக்கிறது.

ஜமாத் சார்பில் முத்தவல்லி சேக் அமீர் #மஜக எடுத்த நிதானமான நடவடிக்கைக்கு பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

#எல்லாப்_புகழும்_இறைவனுக்கே!

தகவல் : மஜக ஊடகபிரிவு